சபா
மலேசிய மாநிலம் / From Wikipedia, the free encyclopedia
சபா அல்லது சாபா (ஆங்கிலம்: Sabah மலாய் மொழி: Sabah அல்லது Saˈbah); என்பது மலேசியாவில் உள்ள 13 மாநிலங்களில் ஒன்றாகும். இது போர்னியோ தீவின் வடக்குப் பகுதியில் அமைந்து உள்ளது.[5][6] சரவாக் மாநிலத்திற்கு அடுத்து, மலேசியாவின் இரண்டாவது மிகப் பெரிய மாநிலமாக விளங்கி வருகிறது.
சபா Sabah | |
---|---|
Sabah Negeri Di Bawah Bayu | |
குறிக்கோளுரை: சபா மாஜு ஜெயா | |
பண்: சபா என் தாயகம் Sabah Tanah Airku Sabah, My Homeland | |
ஆள்கூறுகள்: 5°15′N 117°0′E | |
தலைநகரம் | கோத்தா கினபாலு |
பிரிவுகள் | |
அரசு | |
• யாங் டி பெர்துவா சபா | சுகார் மகிருடின் (Juhar Mahiruddin) |
• முதலமைச்சர் | அஜி நூர் (Hajiji Noor) (பெர்சத்து) |
பரப்பளவு | |
• மொத்தம் | 73,904 km2 (28,534 sq mi) |
உயர் புள்ளி | 4,095 m (13,435 ft) |
மக்கள்தொகை (2020) | |
• மொத்தம் | 34,18,785 |
இனம் | சபா மக்கள் |
மனித வளர்ச்சிச் சுட்டெண் | |
• HDI (2019) | 0.710 (high) |
மலேசிய அஞ்சல் குறியீடு | 88xxx to 91xxx |
மலேசியத் தொலைபேசி எண்கள் | 087 (உள் மாவட்டங்கள்) 088 (கோத்தா கினபாலு & கூடாட்) 089 (இலகாட் இடத்து, சண்டக்கான் & தாவாவ்) |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள் | SA, SAA, SAB, SAC, SY(மேற்கு கரை) SB (பியூபோர்ட்) SD (இலகாட் இடத்து) SK (கூடாட்) SS, SSA, SM (சண்டக்கான்) ST, STA, SW (தாவாவ்) SU (கெனிங்காவு) |
முந்தைய பெயர் | வடக்கு போர்னியோ |
புருணை | 16-ஆம் நூற்றாண்டு |
சூலு சுல்தானகம் | 1658 |
பிரித்தானிய வடக்கு போர்னியோ | 1882 |
சப்பானிய ஆதிக்கம் | 1941–1945 |
இராணுவ நிருவாகம் | 12.10.1945 - 01.07.1946 |
பிரித்தானிய காலனித்துவம் | 01.07.1946 - 16.09.1963 |
மலேசியாவில் இணைவு | 16 செப்டம்பர் 1963[1][2][3][4] |
இணையதளம் | சபா மாநில இணையத்தளம் |
சபாவிற்குத் தென்மேற்கே சரவாக் மாநிலம் உள்ளது. சபா மாநிலத்தின் தென் பகுதியில், இந்தோனேசியாவின் கிழக்கு கலிமந்தான் மாநிலம் எல்லையாகவும் அமைந்து உள்ளது.
மலேசியாவின் மாநிலமாக சபா இருந்தாலும், அது பிரச்சினைக்குரிய நிலப்பரப்பாக இருந்து வருகிறது. பிலிப்பீன்சு நாடு, சபாவின் கிழக்குப் பகுதியை உரிமை கோரி வருகிறது.[7][8] அதைத் தவிர்த்து, சபா மாநிலம் தனக்குச் சொந்தமானது என இந்தோனேசியாவும் உரிமை கொண்டாடுகிறது.
சபாவின் தலைநகரம் கோத்தா கினபாலு ஆகும். இந்த நகரம் முன்பு செசல்டன் என்று அழைக்கப்பட்டது.