ஆசிய பெருமல்லி
இவ்வினம் சந்தன மல்லி வகைகளில் ஒன்றாகும். பூவின் வெந்நிறத்தில் காவி நிறமும் பரவலாகக் கலந்து இர / From Wikipedia, the free encyclopedia
ஆசிய பெருமல்லி (தாவர வகைப்பாட்டியல்: Jasminum grandiflorum) என்பது மல்லிப் பேரினத்தைச் சார்ந்த, இருநூற்றிற்கும் மேற்பட்ட மல்லிகை இனங்களில் ஒன்றாகும். இப்பேரினம், பன்னாட்டு பூக்கும் தாவர மரபுநெறிமுறை குழுமத்தின் (APG IV) நான்காவது பதிப்பின் படி[2], முல்லைக் குடும்பத்திலுள்ள 29 பேரினங்களில்[3] ஒன்றாக இடம் பெற்றுள்ளது. இத்தாவரயினம், யாசுமினம் கிரேண்டிப்ளோரம் என்ற தாவரவியல் பெயரால் அழைக்கப்படுகிறது. 1762 ஆம் ஆண்டு இவ்வினத்தினைப் பற்றிய தாவரவியல் முதற்குறிப்பு உள்ளது. யாசுமினம் கிராண்டிப்ளோரம் (Jasminum grandiflorum) என்ற இனத்தில் இரு சிற்றினங்கள் உள்ளன. அவற்றில் இந்த துணையினம் மட்டுமே பல கண்டங்களில் காணப்படுகிறது. மற்ற துணையினம்( Jasminum grandiflorum subsp. floribundum) அரபு நாடுகளிலும், சில ஆப்பிரிக்க நாடுகளிலும் மட்டுமே காணப்படுகிறது.[4][5][6] இங்கிலாந்திலுள்ள கியூ தாவரவியற் பூங்கா, இத்தாவரியினம் குறித்து வெளியிட்ட முதல் ஆவணக் குறிப்பும், ஆண்டும் வருமாறு: "Sp. Pl. ed. 2 : 9 (1762)". இத்தாவரயினத்தை, தனித்துவமுள்ள இனமாக, பன்னாட்டு அறிஞர் ஏற்றுக் கொண்டுள்ளனர். இவ்வினம் மருத்துவ பயன்பாடுகளையும்[7], சுற்றுச்சூழல் பயன்பாடுகளையும்[8] பெற்றுள்ளதாகக் கருதப்படுகிறது.
ஆசிய பெருமல்லி | |
---|---|
Jasminum grandiflorum | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம் |
உயிரிக்கிளை: | மெய்இருவித்திலி |
உயிரிக்கிளை: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | J. grandiflorum |
இருசொற் பெயரீடு | |
Jasminum grandiflorum L.[1] | |