ஐரோப்பிய ஒன்றியம்
From Wikipedia, the free encyclopedia
ஐரோப்பிய ஒன்றியம் அல்லது ஐ.ஒ (European Union அல்லது EU) என்பது தற்பொழுது 27 உறுப்பு நாடுகளைக் கொண்ட, நாடு தாண்டிய அரசிடை அமைப்பாகும். 1992ல் நிறுவப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய உடன்பாட்டை (மாசுடிரிச் ஒப்பந்தம் என்றும் பரவலாக அறியப்படுகிறது) அடுத்து இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. எனினும், 1950கள் முதற்கொண்டே இயங்கி வந்த பல்வேறு முன்னோடி அமைப்புகளின் செயற்பாடுகள், ஐரோப்பிய ஒன்றியத்தை ஒத்து இருந்தன. ஏறத்தாழ 500 மில்லியன் குடிமக்களைக் கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உலகத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30% ஐ உருவாக்குகின்றன.
ஐரோப்பிய ஒன்றியம் Европейски съюз (பல்கேரியம்) Evropská unie (செக் மொழி) | |
---|---|
கொடி | |
குறிக்கோள்: In varietate concordia (இலத்தீன்) "United in diversity"[1] | |
நாட்டுப்பண்: ஐரோப்பிய வணக்கம் (orchestral) | |
அரசியல் மையங்கள் | பிரஸ்ஸல்ஸ் ஸ்திராஸ்பூர்க் லக்சம்பேர்க் |
ஆட்சி மொழிகள் | 23
|
மக்கள் | ஐரோப்பியர் |
உறுப்பு நாடுகள் | |
அரசாங்கம் | Sui generis |
• ஆணையத்தின் தலைவர் | உர்சுலா வான் டெர் லேயன் |
• பாராளுமன்றத்தின் தலைவர் | ராபர்ட்டா மெட்சோலா |
• ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் | சார்லஸ் மைக்கேல் |
• ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலின் பிரசிடென்சி | செக் குடியரசு |
அமைப்பு | |
• 1951 பரிஸ் ஒப்பந்தம் | ஏப்ரல் 18 1951 |
• 1957 உரோம் ஒப்பந்தம் | மார்ச் 25 1957 |
• 1992 மாசுடிரிச் ஒப்பநதம் | பெப்ரவரி 7 1992 |
பரப்பு | |
• மொத்தம் | 4,381,376 km2 (1,691,659 sq mi) (7வது¹) |
• நீர் (%) | 3.08 |
மக்கள் தொகை | |
• 2008 மதிப்பிடு | 497,198,740 (3வது¹) |
• அடர்த்தி | 114/km2 (295.3/sq mi) (69வது¹) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2007 (IMF) மதிப்பீடு |
• மொத்தம் | $14,953 டிரில்லியன் (1வது¹) |
• தலைவிகிதம் | $28,213 (14வது¹) |
மொ.உ.உ. (பெயரளவு) | 2007 (IMF) மதிப்பீடு |
• மொத்தம் | $16,574 டிரில்லியன் (1வது¹) |
• தலைவிகிதம் | $33,482 (13வது¹) |
நாணயம் | |
நேர வலயம் | ஒ.அ.நே+0 to +2 |
ஒ.அ.நே+1 to +3 | |
இணையக் குறி | .eu |
ஐரோப்பிய ஒன்றியம், தனது உறுப்பு நாடுகளிடையே மக்கள், பொருள்கள், சேவைகள், முதலீடு ஆகியவற்றின் கட்டற்ற நடமாட்டங்களுக்கு உத்தரவாதம் அளிக்கும் பொதுவான சட்டங்களைக் கொண்ட ஒற்றைச் சந்தையை உருவாக்கியுள்ளது. இது பொதுவான வணிகக் கொள்கை, வேளாண்மை, மீன்பிடிக் கொள்கைகள் என்பவற்றுடன் பிரதேச வளர்ச்சிக் கொள்கையையும் பேணி வருகின்றது. பதினைந்து உறுப்பு நாடுகள் யூரோ எனப்படும் பொதுவான நாணய முறையையும் ஏற்றுக்கொண்டுள்ளன. இது வெளிநாட்டு அலுவல்கள் கொள்கையொன்றையும் உருவாக்கியுள்ளதுடன், உலக வணிக அமைப்பு, ஜி8 உச்சி மாநாடு, ஐக்கிய நாடுகள் அவை என்பவற்றிலும் நிகராண்மைக் (representation) கொண்டுள்ளது. 21 ஐரோப்பிய ஒன்றிய நாட்டுகள் "நாட்டோ" (NATO) அமைப்பிலும் உறுப்பு நாடுகளாக உள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்துக்கு உறுப்பு நாடுகளின் நீதியமைப்பு, உள்நாட்டு அலுவல்கள் ஆகியவற்றிலும் பங்களிப்புகள் உண்டு. செஞ்சென் ஒப்பந்தத்தின் (Schengen Agreement) கீழ் சில உறுப்பு நாடுகளிடையேயான கடவுச்சீட்டுக் கட்டுப்பாட்டு முறையும் ஒழிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம், முடிவுகளை எடுப்பதில் அரசுகளிடையான இணக்கம், அரசுகளுக்கு அப்பாற்பட்டு இயங்கும் அமைப்புக்கள் ஆகியவற்றைக் கொண்ட ஒரு கலப்பு முறையைக் கைக்கொள்கிறது. ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஆணையம், ஐரோப்பிய நாடாளுமன்றம், ஐரோப்பிய ஒன்றிய அவை, ஐரோப்பிய அவை, ஐரோப்பிய நீதிமன்றம், ஐரோப்பிய மத்திய வங்கி ஆகிய அமைப்புக்களை உள்ளடக்கியுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் குடிமக்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஐரோப்பிய நாடாளுமன்றத்தைத் தெரிவு செய்கின்றனர்.
1951 ஆம் ஆண்டில் ஆறு நாடுகள் சேர்ந்து உருவாக்கிய ஐரோப்பிய நிலக்கரி மற்றும் உருக்கு சமூகம், 1957 ஆம் ஆண்டின் ரோம் ஒப்பந்தம் ஆகியவையே ஐரோப்பிய ஒன்றியத் தோற்றத்தின் மூலமாகக் கருதப்படுகிறது. அக்காலத்தில் இருந்து, ஒன்றியம் புதிய உறுப்பு நாடுகளை உள்ளடக்கி விரிவடைந்தது.
2012 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு ஐரோப்பிய ஒன்றிய அமைப்பிற்கு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.[2]
2013 ஜூலை 1-ம் தேதி குரோவாசியா நாடு ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடாகச் சேர்க்கப்பட்டது.[3]