நெதர்லாந்து
வட ஐரோப்பிய நாடு / From Wikipedia, the free encyclopedia
நெதர்லாந்து (The Netherlands, /ˈnɛðərləndz/ (கேட்கⓘ); டச்சு: Nederland) நெதர்லாந்து இராச்சியத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ள ஒரு நாடு. இது வட மேற்கு ஐரோப்பாவில் அமைந்துள்ளது. இதன் தீவுகள் சில கரிபியன் பகுதியில் உள்ளன. வடக்கிலும் மேற்கிலும் வடகடலும் தெற்கில் பெல்ஜியமும் கிழக்கில் ஜெர்மனியும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. இது பெல்சியம், செருமனி, ஐக்கிய இராச்சியம் ஆகியவற்றுடன் கடல்சார் எல்லைகளையும்[6] கொண்டுள்ளது. ஒற்றையாட்சி அடிப்படையில் அமைந்த இது ஒரு நாடாளுமன்ற மக்களாட்சி முறையைக் கொண்ட ஒரு நாடாகும். ஆம்ஸ்டர்டாம் இதன் தலைநகரம். அரசாங்கத்தின் இருப்பிடம் ஹேக் நகரம்.[7] நெதர்லாந்து முழுமையும் சில வேளைகளில் ஒல்லாந்து என அழைக்கப்படுவது உண்டு. ஆனால், வடக்கு ஒல்லாந்தும், தெற்கு ஒல்லாந்தும், நெதர்லாந்தின் 12 மாகாணங்களில் இரண்டு மட்டுமே. இந்த நாட்டில் உள்ள ராட்டர்டேம் துறைமுகமானது ஐரோப்பாவின் மிகப்பெரிய துறைமுகம் ஆகும்.
Netherlands நெதர்லாந்து Nederland | |
---|---|
குறிக்கோள்: Je maintiendrai (பிரெஞ்சு)[1] (Ik zal handhaven) (Dutch) (I will maintain) (English)1 | |
நாட்டுப்பண்: Het Wilhelmus | |
தலைநகரம் | ஆம்ஸ்டர்டாம் |
பெரிய நகர் | தலைநகர் |
ஆட்சி மொழி(கள்) | டச்சு |
பிராந்திய மொழிகள் | பிரீசியம் (பிரீசுலாந்து), பப்பியாமெண்டோ (பொனாய்ர்), ஆங்கிலம் (சின் யூஸ்டேசியஸ், சபா)3 |
இனக் குழுகள் (2011) | 79.4% ஒல்லாந்தர், 2.3% துருக்கியர், 2.2% இந்தோனேசியர், 2.1% மொரோக்கர், 2% சுரினாமியர், 0.8% கரிபியன் 8.6% ஏனையோர்[2] |
மக்கள் | டச்சு |
அரசாங்கம் | அரசியலமைப்புச்சட்ட முடியாட்சி, ஒன்றிய நாடாளுமன்ற முறை சார்பாண்மை மக்களாட்சி |
• அரசர் | நெதர்லாந்தின் வில்லியம்-அலெக்சாந்தர் |
• பிரதமர் | மார்க் ரூட்டே |
விடுதலை எண்பதாண்டுப் போரை அடுத்து ஹாப்ஸ்புர்க் பேரரசிடம் இருந்து | |
• அறிவிப்பு | 26 சூலை 1581 |
• அங்கீகாரம் | 30 சனவரி 16484 |
பரப்பு | |
• மொத்தம் | 41,543 km2 (16,040 sq mi) (135வது) |
• நீர் (%) | 18.41 |
மக்கள் தொகை | |
• 2024 மதிப்பிடு | 16,847,007[2] (61வது) |
• அடர்த்தி | 406/km2 (1,051.5/sq mi) (28வது) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2011 மதிப்பீடு |
• மொத்தம் | $704.034 பில்லியன்[3] |
• தலைவிகிதம் | $42,183[3] |
மொ.உ.உ. (பெயரளவு) | 2011 மதிப்பீடு |
• மொத்தம் | $840.433 பில்லியன்[3] |
• தலைவிகிதம் | $50,355[3] |
ஜினி (2006) | 30.9 மத்திமம் |
நாணயம் | யூரோ (€): நெதர்லாந்து5, அமெரிக்க டாலர் ($): கரிபிய நெதர்லாந்து6 |
நேர வலயம் | ஒ.அ.நே+1, −4 (மத்திய ஐரோப்பிய நேரம், அத்திலாந்திக் சீர் நேரம்) |
ஒ.அ.நே+2, −4 (கோடை நேரம்) | |
வாகனம் செலுத்தல் | வலது |
அழைப்புக்குறி | +31, +5998 |
இணையக் குறி | .nl7 |
|
புவியியல் அடிப்படையில் இது ஒரு தாழ்நிலப் பகுதி. இதன் 25% நிலப் பகுதி கடல் மட்டத்துக்குக் கீழ் அமைந்துள்ளதுடன், 21% மக்கள் அப்பகுதிகளில் வாழ்கின்றனர்.[8] அத்துடன் இதன் 50% நிலப்பகுதி கடல் மட்டத்திலிருந்து ஒரு மீட்டருக்கு உட்பட்ட உயரத்தில் அமைந்துள்ளது.[9] இந்தத் தன்மையே இதன் பெயருக்கும் காரணமாகியது. டச்சு மொழியிலும் வேறு பல ஐரோப்பிய மொழிகளிலும் இதன் பெயர் "தாழ்ந்த நாடு" என்னும் பொருள் கொண்டது. கடல் மட்டத்துக்குக் கீழ் அமைந்த நிலப்பகுதிகளில் பெரும்பாலானவை மக்களில் நடவடிக்கைகளினால் ஏற்பட்டவை. குறிப்பாக, பல நூற்றாண்டுகளாக இப் பகுதியில் கட்டுப்பாடற்ற முறையில் இடம்பெற்ற முற்றா நிலக்கரி (peat) அகழ்வினால் இப்பகுதிகள் பல மீட்டர்கள் தாழ்ந்து போயின.
இது ஒரு மக்கள் நெருக்கம் மிகுந்த நாடு. இந்நாடு இங்கு அமைந்துள்ள காற்றாலைகளுக்குப் புகழ்பெற்றது.