பெலருசிய ரூபிள்
From Wikipedia, the free encyclopedia
பெலாருசிய ரூபிள் (பெலருசிய மொழி: беарускі рубель ; சின்னம்: Br; குறியீடு: BYR) பெலாரஸ் நாட்டின் நாணயம். பெலாரஸ் 1991 வரை சோவியத் யூனியனின் ஓரங்கமாக இருந்தது. அப்போது சோவியத் ரூபிள் நாணய முறையே பெலாரஸ் குடியரசிலும் புழக்கத்திலிருந்தது. 1991ல் சோவியத் யூனியன் சிதறியதும், பெலாரஸ் சுதந்திர நாடானாலும், 1992 வரை ரஷ்ய ரூபிள் நாணய முறையே அங்கு புழக்கத்திலிருந்தது. 1992ல் பெலாருசிய ரூபிள் என்ற புதிய நாணயம் அறிமுகபடுத்தப்பட்டது. பணவீக்கம் அதிமானதால் 2000ல் ரூபிள் என்ற பெயருடைய இன்னொரு புதிய நாணயமுறை அறிமுகபடுத்தப்பட்டது. இம்மூன்று நாணயங்களும் முதலாம், இரண்டாம் பெலாருசிய ரூபிள் என்றழைக்கப்படுகின்றன. ஒரு ரூபிளில் 100 கபெயுக்குகள் உள்ளன.
விரைவான உண்மைகள் беларускі рубель (பெலாருசிய மொழி) белорусский рубль (உருசிய மொழியில்), ஐ.எசு.ஓ 4217 ...
беларускі рубель (பெலாருசிய மொழி) белорусский рубль (உருசிய மொழியில்) | |||||
---|---|---|---|---|---|
ஐ.எசு.ஓ 4217 | |||||
குறி | BYR | ||||
அலகு | |||||
குறியீடு | | ||||
மதிப்பு | |||||
துணை அலகு | |||||
1/100 | கபெயிகா | ||||
வங்கித்தாள் | 10, 20, 50, 100, 500, 1000, 5000, 10 000, 20 000, 50 000, 100 000, 200 000 ரூபிள் | ||||
மக்கள்தொகையியல் | |||||
பயனர்(கள்) | பெலருஸ் | ||||
வெளியீடு | |||||
நடுவண் வங்கி | பெலாரஸ் குடியரசின் தேசிய வங்கி | ||||
இணையதளம் | www.nbrb.by | ||||
மதிப்பீடு | |||||
பணவீக்கம் | 10% | ||||
ஆதாரம் | The World Factbook, 2009 கணிப்பு. |
மூடு