போர்த்துக்கேய மொழி
From Wikipedia, the free encyclopedia
போர்த்துக்கேய மொழி (Portuguese language) உலகில் அதிகம் பேசப்படும் மொழிகளில் ஆறாமிடம் வகிக்கிறது. இலத்தீனிலிருந்து உருவான மொழி. காலனித்துவ காலத்தில் உலகெங்கும் பரவியது. இம்மொழி இலத்தீன் எழுத்துக்களாலேயே எழுதப்படுகிறது. இது ஒரு மேற்கத்திய ரோமானிய மொழிக்குடும்பத்தைச் சார்ந்த மொழி ஆகும். போர்ச்சுக்கல், பிரேசில், கேப் வெர்டே, கினி-பிசாவு மொசாம்பிக், அங்கோலா, சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி ஆகிய நாடுகளின் ஒரே அதிகாரப்பூர்வ மொழியாகும்.[2] கிழக்குத் திமோர் எக்குவடோரியல் கினி, சீனாவில் மக்காவ் மாகாணம் போன்றவை இணை அதிகாரப்பூர்வ மொழியாகவும் உள்ளன. காலனித்துவ காலங்களில் விரிவாக்கத்தின் விளைவாக, போர்ச்சுகலின் ஒரு கலாச்சார இருப்பு மற்றும் போர்த்துக்கேய மொழி பேசுபவர்கள் இந்தியாவின் கோவா, டாமன் மற்றும் டையூ ஆகிய மாநிலங்களில் காணப்படுகின்றனர்.[3] இலங்கையின் கிழக்கு கரையோரத்தில் மட்டக்களப்பில்; இந்தோனேசிய தீவான புளோரஸ் மலேசியாவின் மலாக்கா பிராந்தியத்திம் மற்றும் பப்பியாமெந்தோ பேசப்படும் கரீபியன் பகுதியில் ஏபிசி தீவுகள் கேப் வேர்டீன் கிரியோல் என்பது பரவலாகப் பேசப்படும் போர்த்துகீசிய மொழி சார்ந்த ஐரோப்பிய மொழி ஆகும் ஆகும். போர்த்துக்கேய மொழி பேசும் நபர் அல்லது நாட்டை ஆங்கிலத்திலும் போர்த்துக்கேய மொழியிலும் "லூசோபோன்" ("Lusophone") என்று குறிப்பிடலாம்.
போர்த்துக்கேயம் | |
---|---|
Português | |
உச்சரிப்பு | [puɾtu'geʃ] (ஐரோப்பா), [portu'ges], [portu'geis] or [pohtu'geiʃ] (பிரசில்) |
நாடு(கள்) | போர்த்துகல் பிரேசில் அங்கோலா மொசாம்பிக் கேப் வர்டி சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி கினி-பிசாவு கிழக்குத் திமோர் மக்காவு |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | தாய்மொழி: 240 மில்லியன் (பேசுவோர்)[1] (date missing) |
இந்தோ-ஐரோப்பிய
| |
இலத்தீன் எழுத்துமுறை (போர்த்துக்கேய வகை) | |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | 9 நாடுகள் வார்ப்புரு:நாட்டுத் தகவல் ஆபிரிக்க ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றியம் வார்ப்புரு:நாட்டுத் தகவல் தென்னமெரிக்க நாடுகளின் ஒன்றியம் வார்ப்புரு:நாட்டுத் தகவல் மெர்க்கோசுர் அமெரிக்க நாடுகளின் சங்கம் போர்த்துக்கீச மொழிக் கொண்ட நாடுகளின் அமைப்பு |
Regulated by | பன்னாட்டு போர்த்துக்கீச மொழி நிறுவனம்; சி.பி.எல்.பி.; பிரசில் மொழி அக்காடமி (பிரசில்); லிஸ்பன் அறிவியல் அக்காடமி (போர்த்துகல்) |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | pt |
ISO 639-2 | por |
ISO 639-3 | por |
போர்த்துக்கேய மொழியானது இபேரோ-ரோமானிய மொழிக் குழுவின் ஒரு பகுதியாகும். கலிசியாவின் இடைக்கால இராச்சியத்தில் கொச்சை லத்தீனீன் பல மொழிகளில் இருந்து உருவானது. மேலும் சில செல்திக்கு ஒலியியல் மற்றும் சொற் களஞ்சியம் போன்றவற்றைக் கொண்டுள்ளன. [4][5] சுமார் 215 முதல் 220 மில்லியன் மக்கள் போர்த்துக்கேய மொழியைத் தாய்மொழியாகவும், உலகில் மொத்தம் 260 மில்லியன் மக்கள் இம்மொழியை பேசுபவர்களாகவும் உள்ளனர். போர்த்துகீசிய மொழி உலகில் ஆறாவது மிக அதிக அளவில் பேசப்படும் மொழியாக பட்டியலிடப்பட்டுள்ளது. உலகின் மூன்றாவது ஐரோப்பிய மொழியாகவும் அறியப்படுகிறது. மற்றும் தென் அரைக்கோளத்தின் ஒரு பெரிய மொழியாகவும். [6] தென் அமெரிக்காவில் அதிகம் பேசப்படும் மொழியாகும் விளங்குகிறது. மேலும் எசுப்பானிய மொழிக்குப் பிறகு இலத்தீன் அமெரிக்காவில் பேசப்படும் இரண்டாவது அதிகம் பேசும் மொழியாகும். ஐரோப்பிய யூனியன், தெற்கத்திய பொதுச் சந்தை, அமெரிக்க நாடுகள் அமைப்பு (OAS),மேற்காப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகம் (ECOWAS) மற்றும் ஆபிரிக்க ஒன்றியம் ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ மொழியாகும்.