மயில் துத்தம்
From Wikipedia, the free encyclopedia
மயில் துத்தம் (Copper(II) sulfate, cupric sulfate அல்லது copper sulphate, செம்புச்சல்பெற்று) எனப்படும் வேதிச் சேர்மமான காப்பர் சல்ஃபேட்டின் (Copper(II) sulfate, blue vitriol, blue vitreol) வேதியியல் வாய்பாடு CuSO4 ஆகும். இந்த உப்பு வெவ்வேறு அளவு படிக நீரேற்றங்களை கொண்ட பல்வேறுச் சேர்மங்களாக காணப்படுகிறது. இதன் நீரற்ற வடிவம் வெளிர் பச்சை அல்லது சாம்பல் வெள்ளை நிற பொடியாகவும், சாதாரணமாகக் காணப்படும் ஐந்து நீரேறி (pentahydrate) (CuSO4·5H2O) ஒளிர்நீலமாகவும் உள்ளன. நீல நிறச்சாயலில் உள்ள ஐந்து நீரேறி (CuSO4·5H2O) சுற்றுப்புற சூழலுக்கு கடும் நஞ்சாகவும், கண்கள் மற்றும் தோலுக்கு நமைச்சல் காரணியாவும், விழுங்கிவிட்டால் ஊறு விளைவிப்பதாகவும் உள்ளது. மயில் துத்தம் நீரில் கரையும்போது வெப்ப உமிழ் வினை (exothermic reaction) நிகழ்ந்து, எண்முக வடிவம் கொண்ட, இணைக்காந்த தன்மையுள்ள மாழை-நீர் கூட்டுப்பொருளைத் [Cu(H2O)6]2+ (metal aquo complex) தருகிறது. மயில் துத்தத்தின் பிற பெயர்கள்: துரிசு, துருசு, நீலக்கல் (bluestone)[3].
| |||
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
காப்பர் (II) சல்ஃபேட்டு | |||
வேறு பெயர்கள்
குயூபிரிக் சல்ஃபேட்டு மயில் துத்தம் (ஐந்து நீரேறி) நீலக்கல் (ஐந்து நீரேறி) போனட்டைட்டு (மூன்று நீரேறிய கனிமம்) - Bonattite பூத்தைட்டு (ஏழு நீரேறிய கனிமம்) - Boothite சால்கந்தைட்டு (ஐந்து நீரேறிய கனிமம்) - Chalcanthite சால்கோசயனைட்டு (கனிமம்) - Chalcocyanite | |||
இனங்காட்டிகள் | |||
7758-98-7 Y | |||
ATC code | V03AB20 | ||
ChEBI | CHEBI:23414 Y | ||
ChEMBL | ChEMBL604 Y | ||
ChemSpider | 22870 Y | ||
EC number | 231-847-6 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
KEGG | C18713 Y | ||
பப்கெம் | 24462 | ||
வே.ந.வி.ப எண் | GL8800000 (நீரற்றது) GL8900000 (ஐந்து நீரேறி) | ||
| |||
UNII | KUW2Q3U1VV Y | ||
பண்புகள் | |||
CuSO4 | |||
வாய்ப்பாட்டு எடை | 159.62 கி/மோல் (நீரற்றது) 249.70 கி/மோல் (ஐந்து நீரேறி) | ||
தோற்றம் | நீலம் (ஐந்து நீரேறி) சாம்பல் வெள்ளை (நீரற்றது) | ||
அடர்த்தி | 3.603 கி/செமீ3 (நீரற்றது) 2.284 கி/செமீ3 (ஐந்து நீரேறி) | ||
உருகுநிலை | 110 °செ (·4H2O) 150 °செ (423 K) (·5H2O) <650 °செ decomp. | ||
ஐந்து நீரேறி 316 கி/லி (0 °செ) 2033 கி/லி (100 °செ) நீரற்றது 243 கி/லி (0 °செ) 320 கி/லி (20 °செ) 618 கி/லி (60 °செ) 1140 கி/லி (100 °செ) | |||
கரைதிறன் | நீரற்றது எதனோலில் கரையாதது ஐந்து நீரேறி மெதனாலில் கரையும் 10.4 கி/லி (18 °செ) எதனோலில் கரையாதது. | ||
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.733 (நீரற்றது) 1.514 (ஐந்து நீரேறி) | ||
கட்டமைப்பு | |||
படிக அமைப்பு | செஞ்சாய்சதுரம் (Orthorhombic) - சால்கோசயனைட்டு, space group Pnma, oP24, a = 0.839 nm, b = 0.669 nm, c = 0.483 nm[1] முச்சரிவு (Triclinic) (ஐந்து நீரேறி), space group P1, aP22, a = 0.5986 nm, b = 0.6141 nm, c = 1.0736 nm, α = 77.333°, β = 82.267°, γ = 72.567°[2] | ||
வெப்பவேதியியல் | |||
நியம மோலார் எந்திரோப்பி S |
109.05 J K−1 mol−1 | ||
தீங்குகள் | |||
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | anhydrous pentahydrate | ||
ஈயூ வகைப்பாடு | தீங்கானது (Xn) நமைச்சல் காரணி (Xi) சுற்று சூழலுக்கு தீங்கானது (N) | ||
R-சொற்றொடர்கள் | R22, R36/38, R50/53 | ||
S-சொற்றொடர்கள் | (S2), S22, S60, S61 | ||
தீப்பற்றும் வெப்பநிலை | எளிதில் தீப்பற்றாதவை | ||
Lethal dose or concentration (LD, LC): | |||
LD50 (Median dose) |
300 mg/kg (oral, rat) 87 mg/kg (oral, mouse) 470 mg/kg (oral, mammal) | ||
தொடர்புடைய சேர்மங்கள் | |||
ஏனைய நேர் மின்அயனிகள் | இரும்பு (II) சல்பேட்டு மாங்கனீசு (II) சல்பேட்டு நிக்கல் (II) சல்பேட்டு துத்தநாகச் சல்பேட்டு | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||