மலேசிய சுகாதார அமைச்சு
மலேசியாவில் அமைச்சகம் / From Wikipedia, the free encyclopedia
மலேசிய சுகாதார அமைச்சு (மலாய்: Kementerian Kesihatan Malaysia; ஆங்கிலம்: Ministry of Health Malaysia) என்பது மலேசிய அரசாங்க அமைச்சுகளில் ஒன்றாகும். மலேசியாவில் சுகாதாரத் திட்டங்களைச் செயல்படுத்தும் அரசாங்க அமைச்சு ஆகும்.
Kementerian Kesihatan Malaysia Ministry of Health Malaysia | |
மலேசிய மரபுச் சின்னம் | |
மலேசிய சுகாதார அமைச்சகம் புத்ராஜெயா | |
துறை மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | 1963; 61 ஆண்டுகளுக்கு முன்னர் (1963) |
ஆட்சி எல்லை | மலேசிய அரசாங்கம் |
தலைமையகம் | Block E1, E3, E6, E7 & E10, Complex E, Federal Government Administrative Centre, 62590 புத்ராஜாயா |
குறிக்கோள் | உதவுவதற்கு தயார் (Kami Sedia Membantu) |
பணியாட்கள் | 268,014 (2018) |
ஆண்டு நிதி | MYR 26,581,938,800 (2018) |
அமைச்சர் |
|
துணை அமைச்சர் |
|
அமைப்பு தலைமைகள் |
|
வலைத்தளம் | www |
அடிக்குறிப்புகள் | |
முகநூலில் மலேசிய சுகாதார அமைச்சு |
இந்த அமைச்சு பொது சுகாதாரம் உட்பட அனைத்து வகை சுகாதாரம் தொடர்பான துறைகளைக் கண்காணிக்கின்றது. அவற்றுள் முக்கியமாக மலேசியாவில் உள்ள மருத்துவமனைகள், மருத்துவக் கூடங்கள், மருத்துவ ஆராய்ச்சிகள், மருந்துகள், பல் மருத்துவம், உணவு சுகாதாரம், சுகாதார விழிப்புணர்வு மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் நலன் ஆகியவற்றை நிர்வகிக்கின்றது. இதன் தலைமையகம் புத்ராஜெயாவில் அமைந்துள்ளது.
மலேசியாவின் 23-ஆவது அமைச்சரவை; 15-ஆவது பொதுதேர்தலுக்கு பின் 2022 டிசம்பர் 2-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. மலேசிய சுகாதார அமைச்சராக சலிகா முஸ்தபா (Zaliha Mustafa) என்பவர் நியமிக்கப்பட்டார். மறுநாள் 2022 டிசம்பர் 3-ஆம் தேதி, 28 அமைச்சர்களும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். [1]