மலேசிய ரிங்கிட்
From Wikipedia, the free encyclopedia
மலேசிய ரிங்கிட் (நாணயக் குறியீடு: RM; [[ஐ.எசு.ஓ 4217|MYR); (ஆங்கிலம்: Malaysia Ringgit; மலாய் மொழி: Ringgit Malaysia; சீனம்: 马来西亚令吉; ஜாவி: ريڠݢيت مليسيا) என்பது மலேசியாவின் நாணயமாகும். முன்பு மலேசிய டாலர் (Malaysian dollar) என்று அழைக்கப்பட்டது.
விரைவான உண்மைகள் Ringgit Malaysia, ஐ.எசு.ஓ 4217 ...
Ringgit Malaysia | |
---|---|
மலேசிய ரிங்கிட் 50 | |
ஐ.எசு.ஓ 4217 | |
குறி | MYR (எண்ணியல்: 458) |
சிற்றலகு | 0.01 |
அலகு | |
குறியீடு | RM |
மதிப்பு | |
துணை அலகு | |
1⁄100 | சென் |
வங்கித்தாள் | RM1, RM2, RM5, RM10, RM50, RM100 |
Coins | 1, 5, 10, 20, 50 சென், RM1 |
மக்கள்தொகையியல் | |
அதிகாரப்பூர்வ பயனர்(கள்) | மலேசியா |
அதிகாரப்பூர்வமற்ற பயனர்(கள்) | பிலிப்பீன்சு [1] தாய்லாந்து [2] வியட்நாம் [3] |
வெளியீடு | |
நடுவண் வங்கி | மலேசியா நெகரா வங்கி |
இணையதளம் | www.bnm.gov.my |
மதிப்பீடு | |
பணவீக்கம் | 2.1% (2016)[4] |
ஆதாரம் | புள்ளியியல் துறை, மலேசியா |
மூடு
தமிழில் வெள்ளி (மலேசிய வெள்ளி) என்று அழைக்கப் படுகின்றது. ஒரு மலேசிய ரிங்கிட் 100 காசுகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. ஒரு காசை, (தமிழ்: சென்; ஆங்கிலம்: Cents; மலாய் மொழி: Sen) என்று அழைக்கிறார்கள். இந்த நாணயத்தை மலேசியாவின் நடுவண் வங்கியான மலேசியா நெகாரா வங்கி (Central Bank of Malaysia) வெளியிடுகிறது.