மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்துக் கழகம்
From Wikipedia, the free encyclopedia
மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்துக் கழகம், (பொதுவாக மேன் யுனைடெட் எனக் குறிப்பிடப்படுகிறது) இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் ஓல்ட் டிராஃபோர்டை தளமாகக் கொண்ட ஒரு தொழில்முறை கால்பந்துக் கழக அமைப்பாகும். இது ஆங்கில கால்பந்து அமைப்பின் பிரீமியர் லீக் போட்டிகளில் போட்டியிடுகிறது. ரெட் டெவில்ஸ் (சிகப்பு பிசாசுகள்) என்ற புனைப்பெயர் கொண்ட இந்த அணியானது 1878 ஆம் ஆண்டில் நியூட்டன் ஹீத் கால்பந்துக் கழகமாக நிறுவப்பட்டது. பின்னர் 1902 ஆம் ஆண்டில் மான்செஸ்டர் யுனைடெட் என்று பெயர் மாற்றம் பெற்றது. 1910 ஆம் ஆண்டில் தற்போதைய விளையாட்டரங்கமான ஓல்ட் டிராஃபோர்டில் விளையாடத் தொடங்கியது.
முழுப்பெயர் | மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்துக் கழகம் | |||
---|---|---|---|---|
அடைபெயர்(கள்) | தி ரெட் டெவில்ஸ் (சிகப்பு பிசாசுகள்)[1] | |||
தோற்றம் | 1878 (நியூட்டன் ஹீத் கால்பந்துக் கழகம்) | |||
ஆட்டக்களம் | ஓல்ட் டிராஃபோர்ட் | |||
ஆட்டக்கள கொள்ளளவு | 74,310[2] | |||
உரிமையாளர் | மால்கம் கிலேசர் | |||
இணைத் தலைவர்கள் | ஜோயல் கிலேசர் & அவரம் கிலேசர் | |||
மேலாளர் | எரிக் டென் ஹாக் | |||
கூட்டமைப்பு | பிரீமியர் லீக் | |||
2022–23 | பிரீமியர் லீக், 3ஆவது | |||
| ||||
மான்செஸ்டர் யுனைடெட் 20 இங்கிலீஷ் பிரீமியர் லீக் பட்டங்கள், 12 எஃப் ஏ கோப்பைகள், 6 கால்பந்து கூட்டிணைவுக் கோப்பைகள் மற்றும் 21 எஃப் ஏ சமூக கவச கோப்பைகளை வென்றுள்ளது. பன்னாட்டுக் கால்பந்தில், இந்த அணி மூன்று ஐரோப்பிய கோப்பை/யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு பட்டங்கள் மற்றும் யூஈஎஃப்ஏ யூரோப்பா கூட்டிணைவு, யூஈஎஃப்ஏ கோப்பை வெற்றியாளர்கள் கோப்பை, யூஈஎஃப்ஏ உன்னதக் கோப்பை, கண்டங்களுக்கிடையேயான கோப்பை, பிபா கழக உலகக் கோப்பை ஆகியவற்றை தலா ஒரு முறையும் வென்றுள்ளது.[3]
மான்செஸ்டர் யுனைடெட் உலகின் மிகவும் பரவலாக ஆதரிக்கப்படும் கால்பந்துக் கழகங்களில் ஒன்றாகும்.[4][5] 2016-17 ஆம் நிதியாண்டில் மான்செஸ்டர் யுனைடெட் ஆண்டுக்கு 676.3 மில்லியன் டாலர் வருவாயுடன் உலகின் அதிக வருமானம் ஈட்டிய கால்பந்து கழகமாக இருந்தது. 2019 ஆம் ஆண்டில் இதன் மதிப்பு 3.81 பில்லியன் டாலர் மதிப்புடன் உலகின் மூன்றாவது மதிப்புமிக்க கால்பந்துக் கழகமாக இருந்தது.