![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/8f/Athletics_pictogram.svg/langta-640px-Athletics_pictogram.svg.png&w=640&q=50)
2017 ஆசிய தடகள போட்டி
From Wikipedia, the free encyclopedia
2017 ஆசிய தடகளப் போட்டி (2017 Asian Athletics Championships) என்பது ஆசிய தடகளப் போட்டியின் 22 ஆவது பதிப்பாகும். புவனேசுவரில் உள்ள கலிங்கா மைதானத்தில் இது 2017 ஆம் ஆண்டு சூலை 6 முதல் 9 வரை நடைபெற்றது. புவனேசுவர் ஆசிய தடகளப் போட்டியை நடத்திய மூன்றாவது இந்திய நகரமாகும். இந்த நிகழ்வில் 45 நாடுகளில் இருந்து சுமார் 800 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.[1][2]
2017 ஆசிய வாகையாளர்கள் | |
---|---|
![]() | |
நடத்தும் நகரம் | ![]() |
காலம் | July 6–9 |
முதன்மை அரங்கு | கலிங்கா மைதானம் |
பங்குபற்றுவோர் | 655 வீரர்கள் 45 நாடுகளில் இருந்து |
நிகழ்வுகள் | 42 |
← 2015 ஆசிய தடகள போட்டி 2019 ஆசிய தடகள போட்டி → |
2017 ஆசிய தடகளப் போட்டி முதலில் ஜார்கண்டிலுள்ள, ராஞ்சியில் நடத்த திட்டமிடப்பட்டது. ராஞ்சியில் இந்த நிகழ்ச்சியை நடத்த முடியாத நிலையில், புவனேசுவர் இந்த நிகழ்விற்கான இடமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.[3] ஆசிய தடகள சங்கத் தலைவர் அதிலே சுமரிவல்லா, ஆசிய தடகளப் போட்டியை நடத்துவதற்காக புவனேசுவர் நகரைத் தேர்வு செய்தது குறித்து விரிவான விளக்கத்தை 2017 மார்ச்சில் வெளியிட்டார். ஆசிய தடகளப் போட்டியின் முந்தைய போட்டியானது சீனாவில், வூஹான் என்னுமிடத்தில் 2015 ஜூன் 3 முதல் 7 வரை நடைபெற்றது.
ஆசிய தடகளப் போட்டிகள் இரு ஆண்டுக்கு ஒரு முறை ஆசிய தடகள சங்கத்தால் ஏற்பாடு செய்யப்படுகிறது.[4] ஆசிய தடகளப் போட்டிகள் இந்தியாவில் முதலாவதாக 1989 ஆம் ஆண்டு தில்லியிலும்,புனே நகரில் இரண்டாவதாகவும்,மூன்றாவதாக புவனேசுவரிலும் நடைபெற்றுள்ளது.
இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் 2017 ஆகஸ்ட் மாதம் நடைபெறவிருக்கும் உலக கோப்பை போட்டிகளில் பங்கேற்க நேரடியாக தகுதி பெறுவர். இவ்வாண்டு இந்தியா சார்பாக விளையாட மூன்று பேர் தேர்வாகியுள்ளனர்.[5]