அகிலேஷ் யாதவ்
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
அகிலேஷ் யாதவ் (Akhilesh Yadav, இந்தி: अखिलेश यादव) (பிறப்பு 1 சூலை 1973), ஓர் இந்திய அரசியல்வாதியும் உத்திரப் பிரதேசத்தின் கர்ஹாலின் சட்டமன்ற தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவின் மகனுமாவார்.
அகிலேஷ் யாதவ் अखिलेश यादव | |
---|---|
அகிலேஷ் யாதவ் | |
சமாஜ்வாதி கட்சியின் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 01 ஜனவரி 2017 | |
முன்னையவர் | முலாயம் சிங் யாதவ் |
21வது உத்தரப் பிரதேச முதலமைச்சர் | |
பதவியில் 15 மார்ச் 2012 – 19 மார்ச் 2017 | |
முன்னையவர் | மாயாவதி |
பின்னவர் | யோகி ஆதித்தியநாத் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1 சூலை 1973 (1973-07-01) (அகவை 50) சைஃபை, எடவா, உத்தரப் பிரதேசம் |
அரசியல் கட்சி | சமாஜ்வாதி கட்சி |
துணைவர் | டிம்பிள் யாதவ் |
பிள்ளைகள் | அதிதி யாதவ், டீனா யாதவ், அருச்சுன் யாதவ் |
வாழிடம்(s) | சைஃபை, எடவா, உத்தரப் பிரதேசம் |
முன்னாள் கல்லூரி | மைசூர்ப் பல்கலைக்கழகம் சிட்னி பல்கலைக்கழகம் |
இணையத்தளம் | www.akhileshyadav.com |
2000ஆம் ஆண்டில் முதன்முறையாக கன்னவ்ஜ் மக்களவைத்தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்தின் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதே தொகுதியில் மீண்டும் 2004ஆம் ஆண்டிலும் 2009ஆம் ஆண்டிலும் போட்டியிட்டு மூன்று முறை இத்தொகுதியிலிருந்து வெற்றி பெற்றுள்ளார்.[1].
2012ஆம் ஆண்டில் நடந்த உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல்களில் கட்சிப் பரப்புரைகளில் முன்னணியில் இருந்து தனது கட்சி ஆட்சியைப் பற்றிட துணை புரிந்துள்ளார்.[2].
மைசூர்ப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் இளநிலைப் பட்டத்தையும் சூழலியல் பொறியியலில் சிட்னி பல்கலைக்கழகத்திலிருந்து முதுகலைப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.[3][4]