அடம் கில்கிறிஸ்ற்
முன்னாள் ஆஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர் / From Wikipedia, the free encyclopedia
அடம் கிரைக் கில்கிறிஸ்ற் (Adam Craig Gilchrist), (/ˈɡɪlkrɪst/; பிறப்பு:14 நவமபர்,1971), இவர் "கில்லி" மற்றும் "சர்ச்சி" எனவும் அழைக்கப்படும் இவர்[1] முன்னாள் ஆத்திரேலிய துடுப்பாட்ட அணியின் தலைவர் மற்றும் குச்சக் காப்பாளர் ஆவார்.[2]
அடம் கில்கிறிஸ்ற் | |
---|---|
பிறப்பு | 14 நவம்பர் 1969, 14 நவம்பர் 1971 (அகவை 54) Bellingen |
படித்த இடங்கள் |
|
விருதுகள் | Member of the Order of Australia |
கில்கிறிஸ்ட் உலகின் தலைசிறந்த விக்கெட் காப்பாளர்களில் ஒருவராவார்.தொண்ணூற்று ஆறு டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 379 பிடி எடுப்புகள்,37 ஸ்டம்பிங் என மொத்தம் 416 ஆட்டமிழப்புகளை செய்த இவர் தென் ஆபிரிக்காவின் மார்க் பவுச்சர்க்கு அடுத்ததாக டெஸ்ட் போட்டிகளில் அதிக ஆட்டமிழப்புகளை மேற்கொண்ட வீரராக காணப்படுகின்றார்.287ஒருநாள் போட்டிகளில் 417 பிடியெடுப்புகள் 55 ஸ்டம்பிங்ஸ் என மொத்தம் 472 ஆட்டமிழப்புகளை மேற்கொண்டு ஒருநாள் போட்டிகளில் குமார் சங்கக்காரவுக்கு அடுத்ததாக அதிக வீரர்களை ஆட்டமிழக்கச் செய்த இலக்குக் காப்பாளராக திகழ்கின்றார்.96 டெஸ்ட் போட்டிகளில் 17சதங்கள் 26அரைச்சதங்கள் அடங்கலாக மொத்தம் 5570 ஓட்டங்களையும் 287 ஒருநாள் போட்டிகளில் 16 சதங்கள் 55 அரைச்சதங்கள் அடங்கலாக மொத்தம் 9922 ஓட்டங்களையும் 13 T20 போட்டிகளில் மொத்தம் 272 ஓட்டங்களையும் குவித்துள்ளார்.இவர் சதமடித்த பதினாறு ஒருநாள் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.ஆஸ்திரேலிய அணியின் உபதலைவராகவும் ரிக்கி பாண்டிங் இல்லாத சமயங்களில் காப்டனாகவும் பணியாற்றிய கில்கிறிஸ்ட் இங்கிலாந்து பிராந்திய அணியான மிடில்செக்ஸ் அணிக்கும் ஐ.பி.எல் போட்டித் தொடரில் டெக்கான் சார்ஜர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய அணிகளுக்கும் காப்டனாக திகழ்ந்துள்ளார்.இல் தென்னாப்பிரிக்காவில் இடம்பெற்ற ஐ.பி.எல்லின் இரண்டாவது சீசனில் தொடரின் சாம்பியனான டெக்கான் சார்ஜர்ஸ் அணியை அணித்தலைவராக இருந்து வழிநடாத்திச் சென்றவர் கில்கிறிஸ்ட் ஆவார்.இத் தொடரின் அரையிறுதியில் டெல்லி அணிக்கெதிராக பதினேழு பந்துகளில் அரைச்சதம் கடந்து ஐ.பி.எல் தொடரின் அதிவேக அரைச்சதத்தை பூர்த்தி செய்தார். அவ் அரைச்சதமானது தற்போது ஐ.பி.எல் தொடரின் அதிவேக அரைச்சதங்களில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.17/05/2011அன்று பஞ்சாபின் தர்மசாலாவில் நடைபெற்ற பெங்களூர் அணிக்கெதிரான போட்டியில் கில்கிறிஸ்டும் ஷோன் மார்சும் இரண்டாவது விக்கெட்டுக்காக இருநூற்று ஆறு ஓட்டங்களை பகிர்ந்து ஐ.பி.எல் போட்டி ஒன்றில் இருநூறுக்கு மேற்பட்ட ஓட்டங்களை பகிர்ந்த முதல் இணை என்ற சாதனையைப் பதிவு செய்தனர். இவ் இணைப்பாட்டமானது ஐ.பி.எல் தொடரில் எந்த ஒரு விக்கெட்டுக்காகவும் பகிரப்பட்ட அதிகூடிய ஓட்டங்கள் வரிசையில் தற்போது மூன்றாம் இடத்தில் உள்ளது. கில்கிறிஸ்ட்டின் மனைவியின் பெயர் மெலிண்டா.கில்கிறிஸ்ட் –மெலிண்டா தம்பதியினருக்கு ஹரிசன்,ரெட்,அர்ச்சி ஆகிய மூன்று மகன்களும் அன்னி ஜீன் எனப்படும் ஒரு மகளும் உண்டு.கிரிக்கெட்டில் மிக நேர்மையான வீரர்களில் ஒருவராக திகழ்ந்த கில்கிறிஸ்ட் பல தடவை நடுவர் ஆட்டமிழந்ததாக அறிவிக்காதபோதும் கூட தன் சுய முடிவின் அடிப்படையில் மைதானத்தை விட்டு வெளியேறியிருக்கிறார்.[3][4] இரண்டாயிரத்து மூன்றாம் ஆண்டு நடந்த உலககிண்ண இலங்கைக்கு எதிரான அரையிறுதியில் இவரது சுய முடிவிலான ஆட்டமிழப்பு பலரின் கவனத்தை ஈர்த்தது.கில்கிறிஸ்ட்டின் சுயசரிதை நூலான TRUE COLOURS 2008 ஆம் ஆண்டில் வெளியானது.
இவர் 1992 ஆம் ஆண்டில் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 1996 இல் இந்தியாவில் தனது முதல் ஒருநாள் போட்டிகளிலும் 1999 இல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் இவர் அறிமுகமானார்.[5] தனது தொழில் வாழ்க்கையில், ஆஸ்திரேலியாவுக்காக 96 தேர்வு போட்டிகளிலும், 270 க்கும் மேற்பட்ட ஒருநாள் போட்டிகளிலும் விளையாடினார்.