அன்புமணி ராமதாஸ்
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
அன்புமணி ராமதாஸ் (Anbumani Ramadoss, பிறப்பு: அக்டோபர் 9, 1968) ஒரு தமிழக அரசியல்வாதியும், மருத்துவரும் ஆவார். இவரின் தந்தையார் மருத்துவர் ராமதாஸ் தொடங்கிய பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஆவார்.[2] 2004-இல் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இந்திய நடுவண் அரசில் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சராகப் பணியாற்றினார்.[3] 2009-இல் நடந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்குச் சற்று முன் அவரது கட்சி செல்வி ஜெயலலிதா தலைமையில் அமைந்த எதிர்க்கட்சிக் கூட்டணியில் சேர்ந்து ஆளுங்கட்சியான காங்கிரசுக் கூட்டணியை எதிர்த்துப் போட்டியிடத் தீர்மானித்ததைத் தொடர்ந்து அவர் பதவி விலகினார். 2014-இல் தருமபுரி மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4] பின்னர் 2019 ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5]
விரைவான உண்மைகள் அன்புமணி ராமதாஸ்Anbumani Ramadoss, நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ...
அன்புமணி ராமதாஸ் Anbumani Ramadoss | |
---|---|
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2019[1] | |
தொகுதி | தமிழ்நாடு |
பதவியில் 2004–2010 | |
சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் | |
பதவியில் 22 மே 2004 – 22 மே 2009 | |
பிரதமர் | மன்மோகன் சிங் |
முன்னையவர் | சுஷ்மா சுவராஜ் |
பின்னவர் | குலாம் நபி ஆசாத் |
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 16 மே 2014 – 23 மே 2019 | |
முன்னையவர் | இரா. தாமரைச்செல்வன் |
பின்னவர் | செ. செந்தில்குமார் |
தொகுதி | தருமபுரி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | அக்டோபர் 9, 1968 (1968-10-09) (அகவை 55) புதுச்சேரி, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாட்டாளி மக்கள் கட்சி |
துணைவர் | சௌமியா அன்புமணி |
பிள்ளைகள் | சம்யுக்தா, சங்கமித்ரா, சஞ்சுத்ரா |
பெற்றோர்(s) | தந்தை: ச. இராமதாசு தாய்: சரசுவதி |
வாழிடம்(s) | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
கல்வி | மருத்துவம் |
முன்னாள் கல்லூரி | மதராசு மருத்துவக் கல்லூரி, சென்னை |
வேலை | அரசியல்வாதி, மருத்துவர் |
அறியப்படுவது | மாநில தலைவர், பாட்டாளி மக்கள் கட்சி |
கையெழுத்து | |
இணையத்தளம் | https://www.anbumani4cm.com |
As of நவம்பர் 23, 2006 மூலம்: [[2]] |
மூடு