அரசு
From Wikipedia, the free encyclopedia
அரசு (ஒலிப்புⓘ) என்பது அரசாங்கத்தில் உயிர் வாழும் ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு அரசியற் சமூகமாகும்.[1] அரசுகள் அரசுரிமை உள்ளவையாக இருக்கலாம். பல அரசுகள் மாநிலங்களாக அல்லது கூட்டரசுகளாக இருக்கலாம். அவற்றில் சில கூட்டு ஒன்றியத்தினூடாக கூட்டரசில் பங்குபெறுகின்றன.[1] சில அரசுகள் வெளி அரசுரிமை அல்லது அரசியல் ஆதிக்கம் கொண்டவையாக, இன்னொரு அரசின் மீது அதன் உச்ச அதிகாரம் செயல்படக்கூடியவாறு காணப்படும்.[2] அரசு என்னும் பதம் ஒர் அரசினுடைய அரசாங்கத்தின் நிலைத்த பகுதிகளுக்குள்ளும் பாவிக்கப்படும். இது சமயமாகவோ அல்லது குடிமக்கள் நிறுவனமாகவோ காணப்படும்.மனித குலத்தின் மிகப் பழைய மற்றும் முதல் சமூக நிறுவனமாக அரசு கருதப்படுகிறது.