ஆத்திரேலியா
ஓசனியாவிலுள்ள ஒரு நாடு / From Wikipedia, the free encyclopedia
ஆத்திரேலியா (Australia) என்பது உலகின் மிகச்சிறிய கண்டமாகவும் உலகின் மிகப்பெரும் தீவாகவும் உள்ள பெருநிலப்பரப்பையும், தசுமேனியா தீவு, இந்திய, பசிபிக் பெருங்கடல்களில் உள்ள சில சிறிய தீவுகளையும் உள்ளடக்கிய நாடு. இது பொதுநலவாய ஆத்திரேலியா (Commonwealth of Australia) என அதிகாரபூர்வமாக அழைக்கப்படுகிறது. எந்த நாட்டுடனும் இதற்கு நில எல்லை கிடையாது. இந்தோனீசியா, கிழக்குத் திமோர், பப்புவா நியூ கினி ஆகிய நாடுகள் இதன் வடக்கேயும், சொலமன் தீவுகள், வனுவாட்டு, நியூ கலிடோனியா ஆகியன வடகிழக்கேயும், நியூசிலாந்து தென்கிழக்கேயும் இதன் அயல் நாடுகளாக அமைந்துள்ளன.
பொதுநலவாய ஆஸ்திரேலியா Commonwealth of Australia | |
---|---|
நாட்டுப்பண்: நியாயமான ஆத்திரேலியா முன்னேறட்டும்[N 1] | |
தலைநகரம் | கன்பரா |
பெரிய நகர் | சிட்னி |
ஆட்சி மொழி(கள்) | நடுவண் மட்டத்தில் எதுவுமில்லை. |
தேசிய மொழி | ஆங்கிலம்[N 2] |
மக்கள் | ஆஸ்திரேலியன் |
அரசாங்கம் | மக்களாட்சி (அரசியலமைப்பு முடியாட்சி) |
• முடியாட்சி | சார்லசு III |
• ஆளுநர் | டேவிட் எர்லி |
• பிரதமர் | அந்தோனி அல்பனீசி |
சட்டமன்றம் | நாடாளுமன்றம் |
• மேலவை | செனட் அவை |
• கீழவை | பிரதிநிதிகள் அவை |
விடுதலை ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து | |
ஜனவரி 1, 1901 | |
• வெஸ்ட்மின்ஸ்டர் சட்டம் | டிசம்பர் 11, 1931 (செப் 9, 1939 இல் ஏற்றுக்கொள்ளப்பட்டது) |
• ஆத்திரேலிய சட்டம் | மார்ச் 3, 1986 |
பரப்பு | |
• மொத்தம் | 7,741,220 km2 (2,988,900 sq mi) (6வது) |
• நீர் (%) | 1 |
மக்கள் தொகை | |
• 2013 மதிப்பிடு | 23,240,129 [3] (52வது) |
• 2011 கணக்கெடுப்பு | 22,679,189 [4] |
• அடர்த்தி | 2.8/km2 (7.3/sq mi) (233வது) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2010 மதிப்பீடு |
• மொத்தம் | US$882.362 பில்லியன் (17வது) |
• தலைவிகிதம் | US$39,699 (9வது) |
மொ.உ.உ. (பெயரளவு) | 2010 மதிப்பீடு |
• மொத்தம் | US$1.235 ரில்லியன் (13வது) |
• தலைவிகிதம் | அமெ$55,589 (6வது) |
மமேசு (2010) | 0.937 அதியுயர் · 2வது |
நாணயம் | டொலர் (AUD) |
நேர வலயம் | ஒ.அ.நே+8 to +10.53 (ஆஸ்திரேலிய நேரம்) |
ஒ.அ.நே+9 to +11.53 (ஆஸ்திரேலிய நேரம்) | |
அழைப்புக்குறி | +61 |
இணையக் குறி | .au |
1அரசியின் குடும்பத்தினரின் வருகையின் போது முடியாட்சி கீதம் ("அரசியை கடவுள் காக்க") பாடப்படுகிறது()
2ஆங்கிலத்துக்கு சட்ட அடிப்படையில் ("டெ ஜூரி", de jure) உரிமைநிலை ஏதும் இல்லை () 3மூன்று நேர வலயங்களுக்கும் சிறு வேறுபாடுகள் காணப்படுகின்றன. பார்க்க: ஆஸ்திரேலிய நேர வலயம் |
கிட்டத்தட்ட 42,000 ஆண்டுகளாக ஆத்திரேலியப் பழங்குடிகள் ஆத்திரேலியப் பெரு நிலப்பரப்பில் வாழ்ந்து வருவதாக வரலாறு சொல்கிறது.[5] அவ்வப்போது வடக்கில் இருந்து மீனவர்களும், பின்னர் 1606 இல் டச்சு நாடுகாண் பயணிகள் ஐரோப்பாவில் இருந்தும் இங்கு வந்து போன பின்னர்,[6] 1770 இல் ஆத்திரேலியாவின் கிழக்குப் பகுதியில் வந்திறங்கிய ஆங்கிலேயர் அதனை ஐக்கிய இராச்சியத்துக்கென உரிமை கொண்டாடினர். ஆரம்பத்தில் ஆங்கிலேய, சுகொட்டியக் குற்றவாளிகளின் குடியேற்றத் திட்டமாக சனவரி 26, 1788 இல் நியூ சவுத் வேல்சு என்ற குடியேற்றப் பகுதி உருவாக்கப்பட்டது. பின்னர் மக்கள் தொகை பெருக, ஆத்திரேலியாவின் மேலும் பல புதிய பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டு 19ம் நூற்றாண்டின் காலப்பகுதியில் சுயாட்சி கொண்ட மேலும் ஐந்து பிரித்தானியக் குடியேற்றப் பகுதிகள் அமைக்கப்பட்டன. சனவரி 1, 1901 இல் ஆறு தனித்தனியான குடியேற்றப் பகுதிகளும் ஒன்றிணைந்து பொதுநலவாய ஆத்திரேலியா என்ற திறந்த மக்களாட்சி அரசியலமைப்புடன் கூட்டமைப்பு அரசை உருவாக்கின. இதன் தலைநகரம் கான்பரா ஆகும்.
பரப்பளவில் ஆறாவது பெரிய நாடாக இருப்பினும் இதன் மக்கள்தொகை வெறும் 23.2 மில்லியன்கள் (2.32 கோடி, 2013 மதிப்பீட்டின் படி[3]) மட்டுமே. இவர்களில் 60 விழுக்காட்டினர் பெருநிலப்பரப்பில் மாநிலத் தலைநகரங்களை அண்டி வாழ்கின்றனர். ஆத்திரேலியா மேற்கத்திய பொருளாதார முறைகளைப் பின்பற்றுகிறது. ஆள்வீத வருமானம் வலுவான பொருளாதார நாடுகளுக்கு இணையானது. தொழிலாளிகளில் 5% மட்டும் விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். எண்ணெய் வளமும், கனிம வளமும் மிகுந்த நாடு.