இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் / From Wikipedia, the free encyclopedia
இந்தியா இருபத்தி எட்டு மாநிலங்கள் மற்றும் எட்டு யூனியன் பிரதேசங்களாக (UTs) பிரிக்கப்பட்டுள்ளது.[1] யூனியன் பிரதேசங்கள் மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் மேலும் அவர்களின் சொந்த அரசாங்கத்தையும் கொண்டிருக்கின்றன. மூன்று யூனியன் பிரதேசங்கள்,சம்மு காசுமீர் , தில்லி தேசிய தலைநகரப் பிரதேசம் மற்றும் புதுச்சேரிக்கு தங்கள் சொந்த சட்டமன்றங்கள் இருக்கின்றன. 1956-இல், மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ், மொழிவாரியாக மாநிலங்கள் மறுசீரமைக்கப்பட்டன. அதன் பிறகு அவற்றின் அமைப்பு பெரிய அளவில் மாறாமல் உள்ளது. ஒவ்வொரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசம் மேலும் நிர்வாக மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.[2] மாநில மற்றும் யூனியன் பிரதேசங்கள், நிர்வாக சட்டம் மற்றும் நீதித்துறை தலைநகரங்களில் அடிப்படையில் பிரிக்கப்பட்டு உள்ளன.
இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்: |
---|
பரப்பளவு |
மக்கள்தொகை |
உயர்வான இடம் |
ஜி.டி.பி |
ம.வ.சு |
வரி வருவாய் |
வாக்காளர்கள் |
சுருக்கம் |
வளர்ச்சி விகிதம் |
நோய் தடுப்பு |
கல்வியறிவு |
மின்சாரம் |
தலைநகரங்கள் |
ஊடக வெளிப்பாடு |
பெயர் பிறப்பிடம் |
எச்.ஐ.வி விழிப்புணர்வு |
வீட்டு அளவு |
குறைந்த எடை மக்கள் |
வழிபாட்டு இடங்கள் |
தொலைக்காட்சி உரிமை |
போக்குவரத்து வலைப்பின்னல் |
மின் திறன் |
ஆயுள் எதிர்பார்ப்பு |
வாகன எண்ணிக்கை |
இமாச்சலப் பிரதேசம் , கருநாடகம் , மகாராட்டிரம் மற்றும் உத்தராகண்டம் ஆகிய மூன்று மாநிலங்களின் சட்டமன்றங்கள் கோடை மற்றும் குளிர்கால அமர்வுகளுக்காக வெவ்வேறு தலைநகரங்களில் கூடுகின்றன. இலடாக்கு அதன் நிர்வாக தலைநகரங்களாக லே மற்றும் கார்கில் இரண்டையும் கொண்டுள்ளது.