இலங்கை நாடாளுமன்றம்
From Wikipedia, the free encyclopedia
இலங்கை நாடாளுமன்றம் அல்லது இலங்கைப் பாராளுமன்றம் (Parliament of Sri Lanka) 225 அங்கத்தவர்களைக் கொண்ட ஓரவையுடைய சட்டமன்றமாகும். இலங்கை நாடாளுமன்றம் 6 ஆண்டுக்கால தவணையைக் கொண்டுள்ளது. ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்தை ஒத்த முறையை கொண்டுள்ளது. சபாநாயகர் அல்லது அவர் சமூகமளிக்காத போது பிரதி சபாநாயகர் அல்லது குழுக்களின் தலைவர் அல்லது குழுக்களின் பிரதித் தலைவர் சபைக்கு தலைமை தாங்குவார். நாட்டின் நிறைவேற்றதிகாரம் கொண்ட அரசுத்தலைவர் நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு அல்லது தற்காலிகமாக நிறுத்தி வைக்க அல்லது கலைப்பதற்கு அதிகாரத்தைக் கொண்டுள்ளார்.
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நாடாளுமன்றம் ශ්රී ලංකා ප්රජාතාන්ත්රික සමාජවාදී ජනරජයේ පාර්ලිමේන්තුව Parliament of the Democratic Socialist Republic of Sri Lanka | |
---|---|
குடியரசின் 9-வது நாடாளுமன்றம் (இலங்கையின் 16-வது நாடாளுமன்றம்) | |
வகை | |
வகை | |
தலைமை | |
பிரதி சபாநாயகர் | ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய |
குழுக்களின் பிரதித் தலைவர் | |
செயலாளர் நாயகம் | தம்மிக்க தசநாயக்கா |
கட்டமைப்பு | |
உறுப்பினர்கள் | 225 |
அரசியல் குழுக்கள் | அரசு
ஏனையவை (18) |
ஆட்சிக்காலம் | 5 ஆண்டுகள் |
தேர்தல்கள் | |
விகிதாசாரப் பிரதிநிதித்துவம் | |
அண்மைய தேர்தல் | 5 ஆகத்து 2020 |
கூடும் இடம் | |
நாடாளுமன்றக் கட்டடம், சிறீ ஜெயவர்தனபுர கோட்டை | |
வலைத்தளம் | |
www |
மொத்தம் 225 அங்கத்தவர்களில் 196 அங்கத்தவர்கள் 22 தேர்தல் மாவட்டங்களிலிருந்து பொது வாக்கெடுப்பின் மூலமும், மிகுதி 29 அங்கத்தவர்கள் தேசிய அளவில் கட்சிகள் பெரும் வாக்கு எண்ணிக்கைக்கேற்ப கட்சிகளின் தேசியப் பட்டியலிருந்தும் தெரிவு செய்யப்படுகின்றனர்.