உடல் நிறை குறியீட்டெண்
From Wikipedia, the free encyclopedia
உடல் பொருண்மைச் சுட்டெண் (Body mass index) ( உபொசு (BMI)) அல்லது குவெட்டெலெட் சுட்டெண் ஒரு தனியரின் எடைக்கும் உயரத்துக்கும் இடையில் அமையும் விகித மதிப்பாகும். உபொசு(BMI) என்பது மாந்த உடல் பொருண்மையை உடலுயரத்தின் இருபடி மதிப்பால் வகுக்கும்போது கிடைக்கும் மதிப்பாகும். இந்த மதிப்பு கிகி/மீ2 அலகில் வெளியிடப்படுகிறது. இங்கு பொருண்மை கிலோகிராம்களிலும் உயரம் மீட்டர்களிலும் அமைகிறது.
உபொசு தேசிய நலவாழ்வு நிறுவனத்தின் தேசிய இதய, நுரையீரல், குருதி நிறுவன(NHLBI) அட்டவணை அல்லது பட்டியலில் இருந்து பெறப்படுகிறது. இந்த பட்டியல் பல்வேறு உபொசு வகையினங்களை நிறங்களாலோ அல்லது பொருண்மைக்கும் உயரத்துக்கும் இடையில் அமையும் சார்பின் சம மதிப்புக் கோடுகளாலோ அல்லது வரைவுகளாலோ உபொசு மதிப்பைக் கணக்கிட்டுத் தருகிறது. எடுத்துகாட்டாக, ஐக்கிய அரசில் (இராச்சியத்தில்) மக்கள் எடையை கல்(அலகு) எடையிலும் உயரத்தை அடிகளிலும் அங்குலங்களிலும் அளந்தறிவர்.
இழையப் பொருண்மையையும்(தசை,கொழுப்பு, எலும்பு) உயரத்தையும் சார்ந்து ஒரு தனியரை விரிந்த நிலையில் தாழெடை, இயல்பெடை, மிகையெடை, மீயெடை வாய்ந்துள்ள நிலையை வகைபடுத்த உபொசு ஏந்தான குத்துமதிப்பாகும். அகவை முதிர்ந்தோருக்கான உபொசு வகைபாடுகளாக, தாழெடை (18.5 கிகி/மீ2 அளவுக்கும் கீழ்), இயல்பெடை (18.5 முதல் 24.9 வரை), மிகையெடை (25 முதல் 29.9 வரை), மீயெடை (30 முதல் அதற்கு மேல்) ஆகியன வரையறுக்கப்பட்டுள்ளன.[1] குழுக்கள் சார்ந்த புள்ளியியல் அளவாக அல்லாமல், தனியரின் உடல்நலத்தை முன்கணிக்கப் பயன்படுத்தும்போது, உபொசு வயிற்று மீயெடையும் உயர் தசைப் பொருண்மையும் குட்டை உருவமும் உள்ள தனியருக்கு மாற்றுமுறைகளைவிடச் சில வரம்புகளைக் கொண்டுளளது.
உபொசு மதிப்பு 20-25 நெடுக்கத்தை விடக் கூடுதலாக அமையும்போது, அந்த நெடுக்கத்தில் இருந்து உயர உயர, அனைத்து நேர்வு இறப்புவீதம் கூடுகிறது.[2]
பசெ(எஸ்ஐ) அலகுகள் | |
---|---|
இம்பீரியல் அலகுகள் | |