உருளைப்புழு
From Wikipedia, the free encyclopedia
உருளைப்புழு (roundworm) என்பது நெமடோடா (phylum: nematoda) என்னும் விலங்கியல் தொகுதியைச் சார்ந்த உயிரினமாகும் [1][2].இந்த தொகுதியின் கீழ் வாழும் உயிரினங்கள் உலகம் முழுவதும் பரவிக் காணப்படுகின்றன. உருளைப் புழுவினத்தை வேறுபடுத்திக் காண்பது மிகவும் கடினமான செயலாகும். இருப்பினும் 25000 வகையான உருளைப் புழுவினங்கள் விவரிக்கப்பட்டுள்ளன [3][4]. இவற்றில் பாதிக்கு மேற்பட்டவை ஒட்டுண்ணி வகையைச் சார்ந்த உயிரினமாகும். ஒட்டுமொத்தமாக நெமடோடு வகை உயிர்னங்கள் அனைத்தையும் கணக்கில் கொண்டால் ஒரு மில்லியன் உருளைப்புழுவினங்கள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது [5].
உருளைப்புழு (நேமதோடா) Nematodes | |
---|---|
சோயாபீன் நீர்மப்பை உருளைப்புழுவும் முட்டையும் (உருளைப்புழுக்களில் ஒரு வகை) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
துணைத்திணை: | Eumetazoa |
தரப்படுத்தப்படாத: | Bilateria |
தொகுதி: | நேமதோடா Diesing, 1861 |
வகுப்புகள் | |
| |
வேறு பெயர்கள் | |
Nematoidea Rudolphi, 1808 |
உருளைப்புழுக்கள் தட்டைப்புழுக்களைப் போல இல்லாமல், பூச்சி இனத்துடன் சேர்த்து தோலுரிக்கும் வகை உயிரினங்களாக வகைப்படுத்தப்படுகின்றன. உருளைப்புழுக்கள் நீளமான குழல் போன்ற உடல் அமைப்பினை கொண்டவை; இவற்றின் உடலில் உள்ள செரிக்கும் மண்டலம் குழாய் அல்லது குழல் வடிவானவையாகும். நீளமான உடலின் இரு முனைகளிலும் திறப்புகள் (துளைகள்) உண்டு.