எண்ணிம ஆவணச் சுட்டி
From Wikipedia, the free encyclopedia
எண்ணிம ஆவணச் சுட்டி (digital object identifier) அல்லது எ.ஆ.சு. (ஆ:DOI) என்பது ஒரு உருச் சரமாகும். இது எண்ணிம முறையில் உள்ள ஆவணங்கள் அல்லது பொருள்களைத் தனித்துவமாக சுட்டிட பயன்படும் சுட்டியாகும். இணைந்துள்ள ஆவணத்தின் மேனிலைத் தரவுகள் எ.ஆ.சு பெயருடன் சேமிக்கப்படுகிறது. இந்த மேனிலைத் தரவுகளில் ஆவணம் சேமிக்கப்பட்டுள்ள இடம், உரலி போன்றவை, குறிக்கப்பட்டிருக்கும். ஓர் ஆவணத்திற்கான உரலியும் பிற மேனிலை தரவுகளும் மாறலாம்; ஆனால் எ.ஆ.சு மாறாது நிலைத்திருக்கும். எனவே எளிய உரலிகள் மூலம் சுட்டப்படுவதை விட எ.ஆ.சு மூலமாக தொடர்புகள் இணைக்கப்படும்போது அவை நிலையாக இருக்கும். உரலி மாறினால் பதிப்பித்தவர் மேனிலைத் தரவுகளில் மட்டுமே மாற்றங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.[1][2][3]