ஐதராபாத்து (இந்தியா)
இது ஆந்திர மாநிலத்தின் தலைநகரம் மற்றும் தென்னிந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய மாநகராட்சி ஆக / From Wikipedia, the free encyclopedia
ஐதராபாத் (தெலுங்கு: హైదరాబాదు, உருது: حیدرآباد) தென்னிந்தியாவில் உள்ள தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரமும், ஆந்திரா மாநிலத்தின் உரிமைப்படியான தலைநகரமும் ஆகும். இந்நகரம் "முத்துக்களின் நகரம்" என்றும் நிஜாம்களின் நகரம் என்றும் புகழ்பெற்றது.
ஐதராபாத்
హైదరాబాదు حیدرآباد | |
---|---|
மாநகராட்சி | |
அடைபெயர்(கள்): முத்துக்களின் நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தெலுங்கானா |
பிரிவு | தென்னிந்தியா, தக்காணப் பீடபூமி |
மாவட்டங்கள் | ஐதராபாது, ரங்காரெட்டி, மேதக் |
நிறுவல் | பொ.ஊ. 1591 |
தோற்றுவித்தவர் | முகம்மது குலி குட்பு ஷா |
அரசு | |
• வகை | மேயர்-ஆட்சி |
• நிர்வாகம் | ஐதராபாது மாநகராட்சி |
• நா.உ | அசதுத்தீன் ஒவைசி, மல்லா ரெட்டி, பி. தத்தாத்திரேயா, கே. விஸ்வேஸ்வர ரெட்டி |
• நகரத் தந்தை | பொந்து ராம் மோகன் |
• துணை நகரத் தந்தை | பாபா பாசி உதின் |
பரப்பளவு | |
• மாநகராட்சி | 650 km2 (250 sq mi) |
• மாநகரம் | 7,100 km2 (2,700 sq mi) |
ஏற்றம் | 505 m (1,657 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மாநகராட்சி | 68,09,970 |
• தரவரிசை | 4-ஆவது |
• அடர்த்தி | 18,480/km2 (47,900/sq mi) |
• பெருநகர் | 77,49,334 |
• பெருநகர் தரவரிசை | 6வது |
இனம் | ஐதராபாதி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீடுகள் | 500 xxx, 501 xxx, 502 xxx, 508 xxx, 509 xxx |
Area code(s) | +91–40, 8685, 8413, 8414, 8415, 8417, 8418, 8453, 8455தொலைபேசி குறியீடு |
வாகனப் பதிவு | TS 09 முதல் TS 14 வரை |
அதிகாரபூர்வ மொழிகள் | தெலுங்கு, உருது |
மமேசு | உயர் |
இணையதளம் | www |
ஐதராபாத்தின் மக்கள் தொகை 4 மில்லியனுக்கும் மேற்பட்டதாகும். நகரத்தின் பரப்பளவு, மக்கள் தொகை, வளர்ச்சி ஆகியவற்றின் தாக்கத்தின் அடிப்படையில் ஐதராபாத் -1 நகரம் என்று வகைப்பட்டுள்ளது.[1]
இந்தியாவின் தலை சிறந்த தகவல் தொழில்நுட்பக்கூடங்களை உள்ளடக்கி ஐதராபாத் தனிப்பெரும் வளர்ச்சியடைந்துள்ளது. உலகின் மிகப்பெரிய திரைப்படப் படப்பிடிப்பகமான ராமோஜி திரைப்பட நகரம், அத்துடன் இந்தியாவின் 3ம் இடம் வகிக்கும் பெரிய தொழிற்சாலையான டோலிவுட் எனப் பெயர் பெற்ற ஆந்திரத் திரைப்படத்துறை ஆகியவை இங்கு அமைந்துள்ளன. இந்நகரம் மிகையான விளையாட்டு அரங்கங்களுடன் பற்பல விளையாட்டுத் திடல்களுடன் கூடிய விளையாட்டுப் புகலிடமாகவும் அமைந்துள்ளது. அனைத்துலக அளவிலும் தேசிய அளவிலும் போட்டிகள் இங்கு மிகுதியான அளவில் நடக்கின்றன. இந்நகரம் இந்திய பிரீமியர் லீகின் ஓர் முன்னணி அணியான டெக்கான் சார்ஜர்சின் தாயகமாகவும் விளங்குகிறது.
ஐதராபாத்தில் வசிக்கும் மக்களை ஐதராபாதி என்று அழைக்கின்றனர். இந்நகரம் பழமையுடன் புதுமையும் இணைந்த நவீன நகரமாக விளங்குகிறது.[2]