கட்டுநாயக்கா
இலங்கையின் மேல் மாகாணத்தில் அமைந்துள்ள புறநகர்ப் பகுதி / From Wikipedia, the free encyclopedia
கட்டுநாயக்கா (Katunayake, சிங்களம்: කටුනායක), இலங்கையின் மேல் மாகாண நகரமான நீர்கொழும்பின் புறநகராகும். இங்குதான் இலங்கையின் முதன்மை பன்னாட்டு வான்வழி வாயிலான பண்டாரநாயக்க பன்னாட்டு வானூர்தி நிலையம் அல்லது கொழும்பு வானூர்தி நிலையம் அமைந்துள்ளது. 1977இல் ஏற்பட்ட அரசு மாற்றம் மற்றும் திறந்த பொருளியல் கொள்கைகளினால் இங்குள்ள பெரும் நிலப்பகுதி கட்டற்ற வணிக வலயம் (தற்போது ஏற்றுமதி மேம்பாட்டு வலயம்) உருவாக்கிட வழங்கப்பட்டுள்ளது.
விரைவான உண்மைகள் கட்டுநாயக்கா කටුනායක, மாகாணம் ...
கட்டுநாயக்கா
කටුනායක | |
---|---|
மாகாணம் | மேல் மாகாணம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இலங்கை சீர்தர நேர வலயம்) |
மூடு
சிறீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமையகம் கட்டுநாயக்கவிலுள்ள வானூர்திநிலைய வளாகத்தில் அமைந்துள்ளது.[1]