கம்போடியா
தென்கிழக்காசியாவிலுள்ள ஒரு நாடு / From Wikipedia, the free encyclopedia
கம்போடிய முடியரசு (உச்சரிப்பு /kæmˈboʊdɪə/, முழுப் பெயர் , உச்சரிப்பு: Preăh Réachéanachâkr Kâmpŭchea) முற்காலத்தில் கம்பூச்சியா (/kampuˈtɕiːə/) என அறியப்பட்ட ஒரு தென்கிழக்கு ஆசிய நாடாகும். இந்நாட்டில் ஏறக்குறைய 14 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர்..[8] இந்நாட்டின் தலைநகர் புனோம் பென் நகரம். இதுவே இந்நாட்டின் மிகப்பெரிய நகரமும் ஆகும். இந்நாட்டுக் குடிமக்களை "கம்போடியர்" எனவும், கிமர் எனவும் அழைக்கின்றனர். எனினும், “கிமர்” என்னும் குறியீடு கிமர் இன கம்போடியர்களை மட்டுமே அழைக்க பயன்படுத்தப்படுகிறது. பெரும்பான்மையான கம்போடியர் தேரவாத பௌத்த சமயத்தைப் பின்பற்றுகின்றனர்.கம்போடியாவின் தேசிய மதம் தேரவாத பௌத்தம்
கம்போடிய இராச்சியம் Kingdom of Cambodia
| |
---|---|
குறிக்கோள்: ជាតិ សាសនា ព្រះមហាក្សត្រ Chéatĕ, Sasna, Preăh Môhaksătrâ "தேசம், சமயம், மன்னர்" | |
நாட்டுப்பண்: បទនគររាជ Nôkôr Réach "மகத்தான இராச்சியம்" | |
தலைநகரம் | நோம் பென் 11°33′N 104°55′E |
பெரிய நகர் | தலைநகர் |
அதிகாரபூர்வ மொழியும் தேசிய மொழியும் | கெமர்[1] |
அதிகாரபூர்வ அரிச்சுவடி | கெமர்[2] |
இனக் குழுகள் (2019) | |
சமயம் (2019) |
|
மக்கள் | ஆங்கில மொழி: கம்போடியர் கெமர்: ខ្មែរ, Khmêr [kʰmae] |
அரசாங்கம் | ஒருமுக கட்சி நாடாளுமன்ற தேர்வு செய்யப்பட்ட அரசியல்சட்ட முடியாட்சி |
• மன்னர் | நொரடோம் சிகாமொனி |
• பிரதமர் | ஊன் சென் |
சட்டமன்றம் | நாடாளுமன்றம் |
• மேலவை | மேலவை |
• கீழவை | தேசியப் பேரவை |
அமைப்பு | |
68–627 | |
• சென்லா | 627–802 |
802–1431 | |
• நடுக்காலம் | 1431–1863 |
• பிரெஞ்சு காப்பரசு | 11 ஆகத்து 1863 |
• விடுதலை | 9 நவம்பர் 1953 |
• ஐ.நா-வில் இணைவு | 14 திசம்பர் 1955 |
• பாரிசு அமைதி உடன்பாடு | 23 அக்டோபர் 1991 |
• தற்போதைய அரசியலமைப்பு | 24 செப்டம்பர் 1993 |
• ஆசியான் பிரகடனம் | 30 ஏப்ரல் 1999 |
பரப்பு | |
• மொத்தம் | 181,035 km2 (69,898 sq mi) (88-வது) |
• நீர் (%) | 2.5 |
மக்கள் தொகை | |
• 2019 கணக்கெடுப்பு | 15,552,211[4] (73-வது) |
• அடர்த்தி | 87/km2 (225.3/sq mi) (96-வது) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2019 மதிப்பீடு |
• மொத்தம் | $76.635 பில்.[5] |
• தலைவிகிதம் | $4,645[5] |
மொ.உ.உ. (பெயரளவு) | 2019 மதிப்பீடு |
• மொத்தம் | $26.628 பில்.[5] |
• தலைவிகிதம் | $1,614[5] |
ஜினி (2013) | 36.0[6] மத்திமம் |
மமேசு (2019) | 0.594[7] மத்திமம் · 144th |
நாணயம் | ரியெல் (៛) (KHR) |
நேர வலயம் | ஒ.அ.நே+7 (இந்தோசீன நேரம்) |
திகதி அமைப்பு | ஆஆ/மாமா/ஆஆஆஆ |
வாகனம் செலுத்தல் | வலது |
அழைப்புக்குறி | +855 |
ஐ.எசு.ஓ 3166 குறியீடு | KH |
இணையக் குறி | .kh |
கம்போடியாவின் எல்லைகளாக, மேற்கிலும், வடமேற்கிலும் தாய்லாந்து நாடும், வடகிழக்கில் லாவோஸ் நாடும், கிழக்கு மற்றும் தென்கிழக்கில் வியட்நாம் நாடும், தெற்கில் தாய்லாந்து வளைகுடாவும் அமைந்துள்ளன. கம்போடியாவின் முக்கிய புவியியல் கூறுகளாக திகழ்வன இந்நாட்டில் பாயும் மீக்கோங் ஆறும், தொன்லே சாப் ஏரியும் ஆகும். கம்போடியர்களின் முக்கிய தொழில்களாவன: நெசவு, கட்டுமானம், சுற்றுலா சார்ந்த சேவை. கடந்த 2007ம் ஆண்டு மட்டும் ஏறக்குறைய 4 மில்லியன் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் அங்கூர் வாட் கோவில் பகுதிக்கு வருகை தந்தனர்.[9] கடந்த 2005ம் ஆண்டு நடந்த புவி ஆய்வில், கம்போடியாவின் நீர் நிலைகளுக்கு அடியே கல்நெய்யும், இயற்கை எரிவளியும் இருப்பதைக் கண்டறிந்தனர். 2011 ம் ஆண்டு வாக்கில் எண்ணெய்க் கிணறுகள் செயல்பட துவங்கும் என எதிர்பார்க்கின்றனர். இம்முயற்சிகள் நாட்டின் பொருளாதார நிலையை உயர்த்தும் காரணிகளாக அமையும் என நம்புகின்றனர்[10].