கொக்கிப்புழு
From Wikipedia, the free encyclopedia
கொக்கிப்புழு (Hook worm) என்பது மனிதருக்கு பெரும் தீங்கிழைக்கும் புழுக்களின் இனங்களில் ஒன்றாகும். மனிதனுக்கும், விலங்குகளுக்கும், தாவரங்களுக்கும் தீங்கு செய்யும் பலவிதப் புழுக்கள் தரையிலும் நீரிலும் உள்ளன. இவற்றுள் மனித உடலில் மட்டும் சுமார் 50 வகையான புழுக்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவற்றில் பெரும் தீங்கு விளைவிப்பது கொக்கிப் புழுக்களும் அவற்றைச் சார்ந்த இனப் புழுக்களுமே ஆகும். இப்புழு தன் வாயிலுள்ள கொக்கி வடிவிலான பற்களால் எளிதாகக் குடலின் உட்சுவரைக் கடித்துக் கொண்டிருப்பதால் இவை கொக்கிப்புழுக்கள் என்ற பெயரால் அழைக்கப்படுகின்றன.
விரைவான உண்மைகள் கொக்கிப்புழு, உயிரியல் வகைப்பாடு ...
கொக்கிப்புழு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | Nematoda |
வகுப்பு: | Secernentea |
வரிசை: | Strongiloidae |
குடும்பம்: | Ancylostomatidae |
பேரினம்: | Necator/Ancylostoma |
இனங்கள் | |
N. americanus |
மூடு