டில்மா ரூசெஃப்
2011 முதல் 2016 வரை இருந்த பிரேசிலின் ஜனாதிபதி (பிறப்பு 1947) / From Wikipedia, the free encyclopedia
டில்மா வானா ரூசெஃப் (Dilma Vana Rousseff, பிறப்பு: டிசம்பர் 14, 1947) பிரேசிலைச் சேர்ந்த பொருளியலாளரும், அரசியல்வாதியும், பிரேசிலின் அரசுத்தலைவராக (அதிபர்) தெரிவு செய்யப்பட்டவரும் ஆவார். 2005 சூன் மாதத்தில் இவர் அரசுத்தலைவர் லூயிசு இனாச்சியோ லூலா ட சில்வாவினால் அந்நாட்டின் பணித்தலைவராக (Chief of Staff) தெரிவு செய்யப்பட்டார். 2010 ஆம் ஆண்டு நவம்பரில் இடம்பெற்ற அரசுத்தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, நாட்டின் முதலாவது பெண் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
டில்மா ரூசெஃப் Dilma Rousseff | |
---|---|
பிரேசிலின் அரசுத்தலைவர் | |
பதவியில் 1 சனவரி 2011 மே 12, 2016 முதல் இடைநீக்கம் | |
Vice President | மிக்கேல் டெமெர் |
Succeeding | லூயிசு இனாச்சியோ லூலா ட சில்வா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 14 திசம்பர் 1947 (1947-12-14) (அகவை 76) பெலோ ஒரிசோண்டே, பிரேசில் |
அரசியல் கட்சி | தொழிலாளர் கட்சி |
துணைவர்(s) | குளோடியோ கலெனோ கார்லொசு அராவுஜோ |
பிள்ளைகள் | பவுலா |
வாழிடம் | பிரசீலியா |
முன்னாள் கல்லூரி | மினாசு கெராயிசு நடுவண் பல்கலைக்கழகம் ரியோ கிராண்டே டோ சுல் பல்கலைக்கழகம் |
தொழில் | பொருளியலாளர் |
கையெழுத்து | |
இணையத்தளம் | அதிகாரபூவ தளம் |
திசம்பர் 3, 2015 அன்று பிரேசில் நாடாளுமன்றத்தின் கீழவை அலுவல்முறையாக இவரது பணிநீக்கத்திற்கான சட்டவாக்க அனுமதி அளித்தது.[1]
மே 12, 2016 அன்று பிரேசிலின் மேலவை இறுதி முடிவு எடுக்கப்படும் வரை அல்லது ஆறு மாத காலத்திற்கு ரூசெஃபின் அதிகாரத்தையும் பொறுப்புகளையும் நிறுத்தி வைத்துள்ளது.[2] துணைக் குடியரசுத் தலைவர் மிசெல் தெமர் பொறுப்பிலுள்ள குடியரசுத் தலைவராக ரூபெஃபென் அதிகாரங்களை ஏற்றுக்கொண்டுள்ளார்.[3]