துருக்கிய மொழி
From Wikipedia, the free encyclopedia
துருக்கிய மொழி (Türkçeⓘ) துருக்கியர்களின் தாய்மொழியாகும். இது இச்தான்புல் துருக்கி[4] என்றும் அழைக்கப்படுகிறது. இது தென் கிழக்கு ஐரோப்பா, மேற்கு ஆசியா, காகஸஸ், மத்திய ஆசியா, ஐரோப்பாவின் பிற பகுதிகள், ஐரோப்பா ஐக்கிய நாடுகள், மசிடோனா, கிரீசு, துருக்கி, வடக்கு சைப்ரஸ், பல்கேரியா, கிரீஸ் முதலிய நாடுகளிலும், துருக்கி அங்கத்தினராக இல்லாத ஈ.யூ. மொழி பேசப்படும் நாடுகளிலும், சுமார் நூறு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களால் பேசப்படும் மொழியாகும். ஒட்டோமான் பேரரசில் அடங்கியிருந்த நாடுகளிலேயே இம்மொழி பேசுவோர் அதிகளவில் உள்ளனர். துருக்கி, சைப்பிரஸ் ஆகிய நாடுகளின் உத்தியோகபூர்வ மொழியாகும்.
விரைவான உண்மைகள் "துருக்கிய மொழி" அல்லது "துருக்கியின் துருக்கிய மொழி", உச்சரிப்பு ...
"துருக்கிய மொழி" அல்லது "துருக்கியின் துருக்கிய மொழி" | |
---|---|
Türkçe அல்லது (0Türkiye Türkçesi) | |
உச்சரிப்பு | [ˈt̪yɾkˌtʃe] |
நாடு(கள்) | துருக்கி, பல்கேரியா, மாக்கடோனியக் குடியரசு, கொசோவோ, உருமேனியா, சைப்பிரசு, கிரேக்க நாடு, ஈராக், சிரியா,[1] அசர்பைஜான்[2] மற்றும் துருக்கியிலிருந்து வெளியேறின மக்கள் செருமனி, பிரான்சு, நெதர்லாந்து, ஆஸ்திரியா, உஸ்பெகிஸ்தான், ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா, பெல்ஜியம், சுவிட்சர்லாந்து, இத்தாலி, மற்றும் பல்வேறு நாடுகளில் |
பிராந்தியம் | அனத்தோலியா, சைப்பிரஸ், பால்க்கன் மூவலந்தீவு, காக்கசஸ், நடு ஐரோப்பா, மேற்கு ஐரோப்பா |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | உலகில் 50 மில்லியனுக்கு மேல் (1987)[3] (date missing) |
ஆல்ட்டாய மொழிகள் (மாறுபட்டது)
| |
இலத்தீன் அரிச்சுவடி (துருக்கிய வகை) | |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | துருக்கி, சைப்பிரசு, மாக்கடோனியக் குடியரசு* கொசோவோ** *20%க்கு மேல் மக்கள் பேசும் மாநகரங்களில் **பகுதி மொழிகளில் துருக்கியம் ஒன்று |
Regulated by | துருக்கிய மொழிச் சங்கம் |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | tr |
ISO 639-2 | tur |
ISO 639-3 | tur |
மூடு