நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவு
இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலாளர் பிரிவு / From Wikipedia, the free encyclopedia
நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவு இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். இது யாழ்ப்பாணக் குடாநட்டின் வலிகாமப் பிரிவில் அமைந்துள்ளது. இப் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 40 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. அரியாலை, கந்தர்மடம், கொக்குவில், கோண்டாவில், நல்லூர், திருநெல்வேலி, வண்ணார்பண்ணை ஆகிய ஊர்கள் இப் பிரதேச செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. இப் பிரிவின் தெற்குப் பகுதியில் யாழ்ப்பாண மாநகரமும் நீரேரியும் அமைந்திருக்கின்றன. வடக்கு எல்லையில் உடுவில் பிரதேச செயலாளர் பிரிவு உள்ளது. மேற்கில் சண்டிலிப்பாய், யாழ்ப்பாணம் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளும், கிழக்கில் கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவும் உள்ளன.
இது 38 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது[1].