நீல்சு போர்
From Wikipedia, the free encyclopedia
நீல்ஸ் என்றிக் டேவிட் போர் (Niels Henrik David Bohr, IPA: [/nels ˈb̥oɐ̯ˀ/], அக்டோபர் 7, 1885 - நவம்பர் 18, 1962) இயற்பியல் துறையில், குறிப்பாக அணுவியலில், அடிப்படை கருத்தாக்கங்கள் தந்த புகழ்மிக்க டென்மார்க் அறிவியலாளர்.அணுவில் எலக்ட்ரான்களின் இயக்கங்களை, அதன் தன்மைகளைக் கண்டறிந்து அணுவின் அமைப்புக்கு முழு வடிவம் கொடுத்தவர். இவர் இயற்பியலுக்காக 1922 இல் நோபல் பரிசு பெற்றார். 20 ஆம் நூற்றாண்டின் புகழ்மிக்க பல இயற்பியல் அறிஞர்களுக்கு வழிகாட்டியாகவும் மற்றும் பல அறிஞர்களோடு தான் வாழ்ந்த டென்மார்க்கின் கோப்பனாஃகனில் அறிவியல் கூட்டாய்வாளராக இருந்தார். ஐன்ஸ்டைனுடன் இவர் நிகழ்த்திய குவாண்ட்டம் கருத்தியம் பற்றிய கருத்துப்போர் புகழ்பெற்றது. 20 ஆம் நூற்றாண்டில் பெரும் தாக்கம் ஏற்படுத்திய மாபெரும் அறிவியலாளர்களில் ஒருவராக இவர் அறியப்படுகின்றார்.[1]
விரைவான உண்மைகள் நீல்ஸ் போர் Niels Bohr, பிறப்பு ...
நீல்ஸ் போர் Niels Bohr | |
---|---|
பிறப்பு | நீல்ஸ் ஃஎன்றிக் டேவிட் போர் Niels Henrik David Bohr (1885-10-07)7 அக்டோபர் 1885 கோப்பனாஃகன், டென்மார்க் |
இறப்பு | 18 நவம்பர் 1962(1962-11-18) (அகவை 77) கோப்பனாஃகன், டென்மார்க் |
தேசியம் | டென்மார்க் |
துறை | இயற்பியல் |
பணியிடங்கள் | கோப்பனாஃகன் பல்கலைக்கழகம்]] மான்ச்சசிட்டர் பல்கலைக்கழகம்]] |
கல்வி கற்ற இடங்கள் | கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் கோப்பனாஃகன் பல்கலைக்கழகம் |
ஆய்வு நெறியாளர் | கிறிசிட்டியன் கிறிசிட்டியான்சென் Christian Christiansen எர்ண்ஸ்ட் ரதர்போர்டு Ernest Rutherford |
முனைவர் பட்ட மாணவர்கள் | என்றிக் ஆண்ட்டனி கிரேமர்சு Hendrik Anthony Kramers |
அறியப்படுவது | கோப்பனாஃகன் விளக்கம் Copenhagen interpretation]] Complementarity போர் அணு ஒப்புரு Bohr model சோமர்ஃவெல்டு-போர் கருத்தியம் பிகேஎசு (BKS) கருத்தியம் theory போர்-ஐன்சுட்டைன் கருத்துப்போர் |
தாக்கம் செலுத்தியோர் | எர்ணஸ்ட் ரதர்போர்டு |
பின்பற்றுவோர் | மாக்சு டெல்ப்ரூயிக் Max Delbrück வெர்ணர் ஐசன்பெர்கு லீசெ மைட்னெர் Lise Meitner |
விருதுகள் | நோபல் பரிசு (இயற்பியல்) 1922 |
குறிப்புகள் | |
அரால்டு போர் இவர் தம்பி, ஆகெ போர் (Aage Bohr) இவர் மகன். |
மூடு