நெல்
நெல் வரலாறு / From Wikipedia, the free encyclopedia
நெல் அல்லது அரிசி (ஒலிப்புⓘ) (rice) என்பது பொதுவாக ஒரைசா சட்டைவா (ஆசிய அரிசி) அல்லது சிலவேளைகளில் ஒரைசா கிளாபெரிமா (Oryza glaberrima, ஆப்பிரிக்க அரிசி) என்ற புல் இன வகைகளின் விதை ஆகும். இது தென்கிழக்காசியாவில் தோன்றியது. இது ஈரநிலங்களில் வளரக்கூடியது. நெற்பயிர் சராசரியாக ஐந்து மாதங்கள் வரை வளரக் கூடிய ஓர் ஆண்டுத் தாவரமாகும். இப்பயிரின் விதையின் உமி என அழைக்கப்படும் மேலுறை நீக்கப்பட்ட பின் உணவாகப் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு மேலுறை நீக்கப்பட்ட விதை அரிசி என்று அழைக்கப்படுகிறது. ஆனால், அரிசிக்கு முளைக்கும் திறன் கிடையாது. நெல், சோளம், கோதுமைக்கு அடுத்து அதிகம் பயிரிடப்படும் தானியம் ஆகும்.