பாதுகாப்புத் துறை அமைச்சகம் (இந்தியா)
From Wikipedia, the free encyclopedia
பாதுகாப்புத் துறை அமைச்சகம் (இந்தி: रक्षा मंत्रालय, Raksha Mantralay) (abbreviated as MoD), என்பது இந்திய தேசிய பாதுகாப்பு மற்றும் இந்திய பாதுகாப்புப் படைகள் தொடர்பான அனைத்து நிறுவனங்கள் மற்றும் செயல்பாடுகளையும் ஒன்றிணைத்து மேற்பார்வையிடும் பொறுப்பைக் கொண்ட அமைச்சு ஆகும். மேலும் இது இந்தியாவின் கூட்டாட்சி துறைகளில் மிக அதிக செலவினங்களைக் கொண்டது. இதன் மூத்த அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் இணை அமைச்சர் அஜய் பட் ஆவார்.
விரைவான உண்மைகள் துறை மேலோட்டம், ஆட்சி எல்லை ...
துறை மேலோட்டம் | |
---|---|
ஆட்சி எல்லை | இந்திய அரசு |
தலைமையகம் | அமைச்சரவை செயலகம் ரய்சினா குன்று, புது டில்லி |
ஆண்டு நிதி | US$36.03 billion (2011)[1] US$41 billion (2012)[2] |
அமைப்பு தலைமை | |
கீழ் அமைப்புகள் |
|
வலைத்தளம் | mod.nic.in |
மூடு
இந்திய ஆயுதப் படைகள் (இந்திய இராணுவம், இந்திய வான்படை மற்றும் இந்தியக் கடற்படை ஆகியவற்றுடன் சேர்த்து) மற்றும் இந்தியக் கடலோரக் காவல்படை (இந்திய துணை இராணுவப் படைகளின் ஒரு பகுதி) ஆகியவை இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் மேற்பார்வையில் உள்ளன.