பிஆர்சிஏ2 (BRCA2, , பிரெக்கா;[1] மார்பகப் புற்றுநோய் 2, முன்னதான துவக்கம்) என்பது மனிதரில் டி. என். ஏ.வை சீராக்கும் மார்பகப் புற்றுநோய் வகை 1 ஏற்குமை புரதம் எனப்படும் புரதத்தை உருவாக்குகின்ற கண்காணிப்பு மரபணு ஆகும்.[2] பிரெக்கா2 புற்றுக்கட்டி அடக்கும் மரபணுக் குடும்பத்தைச் சார்ந்ததாகும்.[3][4] முழுமையான மரபணுத்தொகைத் தரவுகள் கண்டறியப்பட்டுள்ள பெரும்பாலான பாலூட்டிகளில் இவற்றின் ஒத்துருக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.[5] இந்த மரபணுத் தொடர்பான புரதம் நிறப்புரி சிதைவுகளை சீராக்குவதில் பங்கு பற்றுகின்றன.[6]
விரைவான உண்மைகள் BRCA2 repeat, அடையாளங்கள் ...
BRCA2 repeat |
|
crystal structure of a rad51-brca2 brc repeat complex |
அடையாளங்கள் |
குறியீடு |
BRCA2 |
Pfam |
PF00634 |
InterPro |
IPR002093 |
SCOP |
1n0w |
|
மூடு
விரைவான உண்மைகள் BRCA-2 helical, அடையாளங்கள் ...
BRCA-2 helical |
|
structure of a brca2-dss1 complex |
அடையாளங்கள் |
குறியீடு |
BRCA-2_helical |
Pfam |
PF09169 |
InterPro |
IPR015252 |
SCOP |
1iyj |
|
மூடு
விரைவான உண்மைகள் BRCA2, oligonucleotide/oligosaccharide-binding, domain 1, அடையாளங்கள் ...
BRCA2, oligonucleotide/oligosaccharide-binding, domain 1 |
|
structure of a brca2-dss1 complex |
அடையாளங்கள் |
குறியீடு |
BRCA-2_OB1 |
Pfam |
PF09103 |
InterPro |
IPR015187 |
SCOP |
1iyj |
|
மூடு
விரைவான உண்மைகள் BRCA2, oligonucleotide/oligosaccharide-binding, domain 3, அடையாளங்கள் ...
BRCA2, oligonucleotide/oligosaccharide-binding, domain 3 |
|
structure of a brca2-dss1 complex |
அடையாளங்கள் |
குறியீடு |
BRCA-2_OB3 |
Pfam |
PF09104 |
InterPro |
IPR015188 |
SCOP |
1iyj |
|
மூடு
விரைவான உண்மைகள் Tower domain, அடையாளங்கள் ...
Tower domain |
|
structure of a brca2-dss1 complex |
அடையாளங்கள் |
குறியீடு |
Tower |
Pfam |
PF09121 |
InterPro |
IPR015205 |
SCOP |
1mje |
|
மூடு
பிரெக்கா2 மரபணு மனிதரில் 13ஆம் நிறப்புரியின் நீளமான பகுதியில் உள்ள (q) 12.3 (13q12.3)இல் அமைந்துள்ளது.[2] இதன் முதல் படியாக்கத்தை மைரியட் ஜெனடிக்சு அறிவியலாளர்கள் உருவாக்கினர்.[7]
பிரெக்கா1 அல்லது பிரெக்கா2 மரபணு மாற்றமடைந்த நோயாளிகளுக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புக்களை கண்டறியும் காப்புரிமைகள் மைரியட் ஜெனடிக்சு நிறுவனத்திடம் உள்ளது.[8][9] இந்த சோதனைகளை தான் மட்டுமே வழங்கும் வணிக அமைப்பினால் 1994இல் சிறிய நிறுவனமாக இருந்த மைரியட் 2012இல் ஆண்டுக்கு $500மில்லியன் வருமானமுள்ள பொதுப்பங்கு நிறுவனமாக உயர்ந்துள்ளது.[10] இச்சோதனைக்கான மிக உயரிய விலை சர்ச்சையைக் கிளப்பியுள்ளது; மேலும் இதன் சோதனை முடிவுகளை மற்ற ஆய்வகங்கள் மூலமாக சரிபார்க்கும் தன்மை இல்லாத குறைகளும் எழுந்தன. இவற்றையடுத்து இந்த நிறுவனத்தை எதிர்த்து மூலக்கூற்று நோய்க்குறியியல் சங்கம் வழக்கு தொடுத்துள்ளது.[11]