பீட்டர் ஓ டூல்
பிரித்தானிய நடிகர் / From Wikipedia, the free encyclopedia
பீட்டர் ஜேம்சு ஓ'டூல் (Peter James O'Toole) [2] (2 ஆகத்து 1932 – 14 திசம்பர் 2013) அயர்லாந்தைச் சேர்ந்த பிரபல நடிகர்.[3] நாடகக் கலைக்கான ராயல்அகாதமியில் பயின்ற இவர் நாடகங்களில் நடிக்கத் துவங்கி சிறந்த சேக்சுபீரிய நடிகராக புகழ் பெற்றார். தமது முதல் திரைப்படத்தில் 1959ம் இல் நடித்தார். தொடக்க காலத்தில் செய்தியாளராகப் பணியாற்றிய டூல், பின்னர் இங்கிலாந்து கடற்படையில் வானொலி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.[4]
பீட்டர் ஓ'டூல் | |
---|---|
லாரன்ஸ் ஒப் அரேபியா திரைப்படத்திற்கான விளம்பரப் படத்தில் | |
பிறப்பு | பீட்டர் ஜேம்சு ஓ'டூல்[1] (1932-08-02)2 ஆகத்து 1932 கன்னிமரா, கால்வே கவுன்ட்டி, அயர்லாந்து அல்லது லீட்சு, இங்கிலாந்து |
இறப்பு | 14 திசம்பர் 2013(2013-12-14) (அகவை 81) இலண்டன், இங்கிலாந்து |
தேசியம் | ஐரியர் |
குடியுரிமை | அயர்லாந்து, ஐக்கிய இராச்சியம் |
படித்த கல்வி நிறுவனங்கள் | நாடகக் கலைக்கான ரோயல் அகாதமி |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1954–2012 |
வாழ்க்கைத் துணை | சியான் பிலிப்சு (1959–1979) |
பிள்ளைகள் | 3; நடிகை கேட் ஓ'டூல் உட்பட |
விருதுகள் | |
அகாதமி விருதுகள் | |
அகாதமி கௌரவ விருது 2003 | |
எம்மி விருதுகள் | |
மிகச்சிறந்த துணை நடிகர் – குறுந்தொடர் அல்லது திரைப்படம் 1999 ஜோன் ஆஃப் ஆர்க் (குறுந்தொடர்) | |
கோல்டன் குளோப் விருதுகள் | |
கோல்டன் குளோப் சிறந்த நடிகர் – திரைப்படம் நாடகம் 1964 பெக்கட் 1968 த லயன் இன் வின்டர் கோல்டன் குளோப் சிறந்த நடிகர் – திரைப்படம் (இசைவடிவ அல்லது சிரிப்பு) 1969 குட்பை, மிஸ்டர். சிப்சு | |
பாஃப்டா விருதுகள் | |
முன்னணி வேடத்தில் மிகச்சிறந்த நடிகர் 1962 லாரன்ஸ் ஒப் அரேபியா | |
1962 ஆம் ஆண்டு வெளியான லாரன்சு ஆஃப் அரேபியா திரைப்படத்தில் டி.ஈ.லாரன்சாக நடித்து உலகெங்கும் பரவலாக அறியப்பட்டார். இதற்காக அகாதமி விருது பரிந்துரைகளில் முதன்முதலாக இடம் பெற்றார். இவருக்கு மேலும் ஏழு அகாதமி விருது பரிந்துரைகள் கிடைத்தன – பெக்கட் (1964), த லயன் இன் வின்டர் (1968), குட்பை, மிஸ்டர். சிப்சு (1969), த ரூலிங் கிளாஸ் (1972), த ஸ்டன்ட் மேன் (1980), மை பேவரைட் இயர் (1982) மற்றும் வீனசு (2006) – ஆகிய திரைப்படங்களுக்காகவும் இவர் பரிந்துரை செய்யப்பட்டார். அதிகமுறை விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டு விருது கிடைக்காதவர் எனும் சாதனையைப் படைத்தார். இவர் நான்கு கோல்டன் குளோப் விருது, ஒரு பாஃப்டா விருது மற்றும் எம்மி விருதுகளைப் பெற்றுள்ளார். 2003 இல் கௌரவ அகாதமி விருது பெற்றுள்ளார்.[5]