மனிதர்
இருகால் பாலூட்டி / From Wikipedia, the free encyclopedia
மனித இனம் இருகால் உயர் விலங்கினத்தைச் சேர்ந்த, ஹொமினிடீ குடும்பத்தை சேர்ந்த ஓர் இனமாகும். மரபணுச் சான்றுகளின்படித் தற்கால மனித இனம் சுமார் 200,000 ஆண்டுகளுக்குமுன், ஆப்பிரிக்காவில் தோன்றியதாகக் கருதப்படுகின்றது. மனிதர்களுக்கு மிகவும் வளர்ச்சியடைந்த மூளை உண்டு. இது, பண்பியல் பகுப்பாய்வு (abstract reasoning), மொழி (Language), உண்முக ஆய்வு, பிரச்சனைகளைத் தீர்த்தல் (Problem Solving), உணர்வுகள் போன்றவற்றைக் கையாளக்கூடிய வல்லமை கொண்டது. இத்தகைய வல்லமை கொண்ட மூளையும், நிமிர்ந்த உடலும் மனித வளர்ச்சிக்கு முக்கியக் காரணங்களாக அமைந்தன. நிமிர்ந்த உடலினால் முன்னுறுப்புக்கள் (கைகள்) இரண்டும், வேறு வேறு வேலைகளைச் செய்வதற்குக் கிடைத்தன. இதனால் மனித இனம், வேறெந்த உயிரினங்களைவிடவும் சிறப்பாகச் செயல்பட முடியும். மனிதர்கள் உலகம் முழுவதும் பரந்து உள்ளனர். அன்டார்க்டிக்கா தவிர்த்த ஏனைய எல்லாக் கண்டங்களிலும் மனிதர் பெருந்தொகையாக வாழ்கின்றனர். ஜூலை 2008 நிலைப்படி, 6.7 பில்லியனுக்கு மேற்பட்ட தொகையில் மனிதர்கள் உலகில் வாழ்கின்றனர். மொத்தமாக ஏழு பில்லியன் சனத்தொகையுடன் மனித இனம் இவ்வுலகில் வாழும் மிகப்பெரிய பாலூட்டி இனங்களுக்குள் ஒன்றாகத் திகழ்கின்றது. மனித இனத்தின் மிகப்பெரிய அளவிலான சனத்தொகை ஆசியாவிலும் (61 %),மீதி சனத்தொகை அமெரிக்கா (14 %),ஆபிரிக்கா (14 %),ஐரோப்பா (11 %) மற்றும் ஓசியானியா (0 .5 %) போன்ற கண்டங்களிலும் வாழ்கின்றனர். மனிதரில், ஹோமோ சேப்பியென்சு சேப்பியெசு எனும் ஒரு துணையினம் மட்டுமே உள்ளது.
மனிதர்[1] புதைப்படிவ காலம்:.2–0 Ma Pleistocene - Recent | |
---|---|
மனிதர்கள் பயனீர் பிளேக் சித்தரிக்கப்பட்டுள்ளன | |
Not rated | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | இயுக்கரியோட்டா |
திணை: | |
தொகுதி: | கோடாட்டா |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | Hominidae |
பேரினம்: | Homo (genus) |
இனம்: | H. sapiens |
துணையினம்: | H. s. sapiens |
முச்சொற் பெயரீடு | |
Homo sapiens sapiens L, 1758 |
பெரும்பாலான உயர்நிலை உயிரினங்களைப் போலவே, மனிதனும் ஒரு சமூக விலங்கு ஆவான். மனிதர் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கும், தங்களை ஒழுங்கமைத்துக் கொள்ளல் என்பவற்றுக்காகவும் தொடர்பு முறைகளைப் பயன்படுத்துகின்றனர். மனிதர்கள் பல சிக்கலான சமூக அமைப்புக்களை உருவாக்கியுள்ளனர். இவற்றுள் குடும்பங்கள் தொடக்கம் நாடுகள் வரையான அமைப்புகள் அடங்குகின்றன. மனிதர்களிடையேயான சமூகத் தொடர்புகள், பெருமளவுக்கு வேறுபடுகின்ற மரபுகள், சடங்குகள், நெறிமுறைகள், விழுமியங்கள், சமூக நெறிகள், சட்டங்கள் போன்றவற்றை உருவாக்கியுள்ளன.