மருத்துவப் படிமவியல்
From Wikipedia, the free encyclopedia
மருத்துவப் படிமவியல் (Medical imaging) என்பது மருத்துவமனை ஆய்வுக்காகவும் மருத்துவ இடையீட்டிற்காகவும் உடலகப் பகுதிகளையும் உடல் உறுப்புகள், இழையங்கள் (திசுக்கள்) ஆகியவற்றின் உடலியக்கங்களையும் காட்சி உருவகிப்புகளாகத் தரும் நுட்பமும் செயல்முறையும் ஆகும். மருத்துவப் படிமவியல் தோலாலும் எலும்புகளாலும் மறைந்துள்ள அக்க் கட்டமைப்புகளைக் காட்டுவதோடு, நோய் அறியவும் தை ஆற்றவும் உதவுகிறது. இப்புலம் இயல்பு உடற்கூற்று, உடலியக்கத் தரவுத்தளத்தை உருவாக்கவுமதவற்றில் அமையும் இயல்பிகந்த மாற்றங்களை இனங்காட்டவும் உதவுகிறது. மருத்துவக் காரணங்களுக்காக நீக்கப்பட்ட உறுப்புகள், இழையங்கள் ஆகியவ்ற்றின் படிமங்களும் எடுக்கப்படுகின்றன,னைச்செயல்முறைகள் நோயியலின் பகுதியாகவே கருதப்படும். இது மருத்துவப் படிமவியலின் பணியல்ல.
மருத்துவப் படிமவியல் Medical imaging | |
---|---|
நோய் கண்டறிச் செயல்முறைகள் | |
கணினிவழிப் பிரித்துவரையும் அலகீட்டுவழிப் படிமம், குலைந்த வயிற்றுப் பெருந்தமனிக் குருதிக்குழல் வீக்கத்தைக் காட்டுகிறது]] | |
ICD-10-PCS | ICD10PCS |
ICD-9 | ICD9proc |
ம.பா.த | 003952 D 003952 |
OPS-301 code | OPS301 |
MedlinePlus | 007451 |
மருத்துவப் படிமவியல் உயிரியல் படிமவியலின் ஒரு புலமாகும். இது கதிரியல் (இதில் X-கதிர் வரைவியல் காந்த ஒத்திசைவுப் படிமவியல், மருத்துவப் புறவொலி வரைவியல் ஆகியன அடங்கும்) அகநோக்கியல், மீண்மைவரைவியல், தொடுகை வரைவியல், வெப்ப வரைவியல், மருத்துவ ஒளிப்படவியல், அணுக்கரு மருத்துவம் ஆகியனவும் நேர்மின்னன் உமிழ்வுத் பிரித்துவரைவியல் (positron emission tomography)(PET) தனி ஒளியன் உமிழ்வு கணிப்புத் பிரித்துவரைவியல் (Single-photon emission computed tomography( (SPECT) ஆகிய உடலியக்க ஆய்வு நுட்பங்களும் உள்ளடங்கும்.
படிமம் உருவாக்காத ஆனால் தரவுகளை வரைபடமாகத் தரவல்ல அளவுக்கருவிகளும் பதிவுத் தொழில்நுட்பங்களும், மின்மூளை வரைவியல், காந்த மூளை வரைவிய்ல், இதய மின்துடிப்புப் பதிவியல் போன்றவையும் மருத்துவப் படிமவியலின் வடிவங்களாகக் கருதப்படுகின்றன.
உலகளவில் 2010 ஆண்டு வரை 5 பில்லியன் மருத்துவப் படிம ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.[1] ஐக்கிய அமெரிக்காவில் மட்டும் 2006ஆம் ஆண்டில் மொத்த கதிர் வீச்சுக்கு ஆட்படுத்தியமையில் 50%க்கும் கூடுதலாக மருத்துவ படிமவியலால் ஆட்படுத்தப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[2]
மருத்துவப் படிமவியல் ஊடுருவாதன எனக் கருதப்படும் நுட்பங்களால் உடலின் உட்கூறுபாடுகளைப் படிம மாக்குவதாக்க் கொள்ளப்படுகிறது. இந்தக் குறுகிய நோக்கில், மருத்துவப் படிமவியலைக் கணிதவியல் தலைக்கீழ் சிக்கல்களோடு ஒப்பிடலாம்மதாவது, காரணத்தை ஈழையங்களின் இயல்புகளை) விளிவில் இருந்து (நோக்கிய குறிகையில் இருந்து) உய்த்தறிகிறோம். மருத்துவ புறவொலி வரைவியலில், உள்ளிழையத்தில் ஆய்கோல் அனுப்பிப் பெறும் புறவொலி அழுத்த அலைகளையும் எதிரொலிகளையும் சார்ந்து உட்கட்டமைப்பைக் காட்டுகிறது. உட்செலுத்து கதிர்வரைவியலில், ஆய்கோல் X-கதிர்,. மின்காந்தக் கதிர் ஆகியவற்றை அனுப்பி, அக்கதிரை எலும்பு, தசை, கொழுப்புசார் இழையங்களின் உறிஞ்சளவுகளால் அகக் கட்டமைப்பை வரைகிறது.
ஊடுருவாத எனும் சொல் உடலுக்குள் கருவி ஏதும் உள்நுழைக்காத செயல்முறைகளைக் குறிக்கப் பயன்படுகிறது. எனவே படிமவியல் நுட்பங்கள் அனைத்தும் ஒருவகையில் ஊடுருவாத வகையினவே.