மலேசியா போக்குவரத்துப் பதிவெண்கள்
போக்குவரத்துப் பதிவெண்களை மலேசிய சாலைப் போக்குவரத்துத் துறை வழங்குகிறது. / From Wikipedia, the free encyclopedia
மலேசியாவில் உள்ள அனைத்துத் தனியார்; வணிக வாகனங்களின் முன்புறத்திலும், பின்புறத்திலும் மலேசியா போக்குவரத்துப் பதிவெண்கள் (நம்பர் பிளேட்டுகள்) காட்டப்பட வேண்டும் என்பது அரசு சட்டமாகும். போக்குவரத்துப் பதிவெண்களை மலேசிய சாலைப் போக்குவரத்துத் துறை (மலாய்: Jabatan Pengangkutan Jalan Malaysia) வழங்குகிறது.
மலேசிய சாலைப் போக்குவரத்துத் துறையை, மலேசியாவில் சுருக்கமாக சே.பி.சே. (JPJ) என்று அழைக்கிறார்கள். மிக அண்மையில் வழங்கப்பட்ட போக்குவரத்துப் பதிவெண்களை மலேசிய சாலைப் போக்குவரத்துத் துறை இணையத்தளம் மூலம் சரிபார்க்கலாம். [1] அதன் இணைய முகவரி: https://www.jpj.gov.my/en/web/main-site/semakan-nombor-pendaftaran-terkini
தற்போது பயன்படுத்தப்படும் வடிவங்களின் எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு;
மேலதிகத் தகவல்கள் பதிவெண்களின் வகை, தளவமைப்பு ...
பதிவெண்களின் வகை | தளவமைப்பு |
---|---|
தனியார் மற்றும் வணிக வாகனங்கள் | ABC 4567 அல்லது WD 4567 C அல்லது QAA 4567 C அல்லது SAB 4567 C அல்லது KV 4567 B |
வாடகை மோட்டார் (Taxi) | HAB 4567 |
இராணுவம் (Military) | ZA 4567 |
தற்காலிகம் (Temporary) | A 2341 A (W/TP 2341 for Kuala Lumpur) |
தூதரகங்கள் (Diplomatic Corps) | 12-34-DC |
அரச குடும்பங்கள்; அரசாங்கம் (Royals and government) | முழுப் பெயர் (Full title) |
மூடு