மூடிய கடல்
From Wikipedia, the free encyclopedia
மூடிய கடல் (Mare clausum) என்பது பன்னாட்டுச் சட்டப்படி, ஒரு நாட்டின் சட்ட அதிகாரத்திற்கு உட்பட்ட ஒரு கடல், அல்லது பெருங்கடல், அல்லது பயணம் செய்யத்தக்க நீர் பகுதி மூடப்பட்டு இருப்பது அல்லது மற்ற நாடுகளால் அணுக முடியாமல் இருப்பதை குறிக்கின்றது. மூடிய கடல் என்பது விதிகளற்ற கடலுக்கு( mare liberum) விதிவிலக்கு. இதற்குப் பொருள், அனைத்து நாடுகளும் கப்பல் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்ட ஒரு கடல் ஆகும்[1][2]. பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட பன்னாட்டு நீர் கொள்கைப்படி, பெருங்கடல்கள் [தொடர்பிழந்த இணைப்பு], கடல்கள், தேசிய அதிகாரத்திற்கு வெளியே உள்ள நீர், இவை எல்லாம் கப்பல் பயணம் செய்ய திறந்துவிடப்பட்டிருக்கும், இதற்குப் பெயர், உயர்ந்த கடல் அல்லது விதிகளற்ற கடல் என்பதாகும். போச்சுகல், எசுப்பானிய அரசுகள் கண்டுபிடிப்புகளின் காலத்தில் மூடிய கடல் கொள்கையை ஆதரித்தன[3]. ஆனால் விரைவில் மற்ற ஐரோப்பா நாடுகள் இதற்கு அறைகூவல் விட்டன.