வன்னியர்
வன்னியர் குல சத்திரியர்கள் / From Wikipedia, the free encyclopedia
வன்னியர் (Vanniyar) அல்லது வன்னிய குல சத்திரியர் (Vanniya Kula Kshatriya's) எனப்படுவோர் தமிழகத்தில் குறிப்பாக வடதமிழகத்தில் (காவேரி ஆற்றின் வடக்கு பகுதிகளில்) அடர்த்தியாகவும், மற்ற பகுதிகளில் குறிப்பிட்ட அளவிலும் வாழுகின்ற ஒரு மிகப்பெரிய தமிழ் சாதியினர் ஆவர்.[1][2] இவர்கள் புதுச்சேரி, தெற்கு கருநாடகம் மற்றும் தெற்கு ஆந்திரா போன்ற பகுதிகளிலும் வாழ்கின்றனர். இவர்கள் தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீடு பட்டியலில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ளனர்.[3] இவர்கள் முன்னொரு காலத்தில் பள்ளி என்ற பெயரால் அறியப்பட்டனர்.
விரைவான உண்மைகள் குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள், மொழி(கள்) ...
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
---|---|
வட தமிழகம், புதுச்சேரி | |
மொழி(கள்) | |
தமிழ் | |
சமயங்கள் | |
இந்து சமயம் |
மூடு