வலிகாமம் கிழக்கு பிரதேச சபை
From Wikipedia, the free encyclopedia
வலிகாமம் கிழக்கு பிரதேச சபை (Valikamam East Divisional Council) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள உள்ளூராட்சி அமைப்புக்களுள் ஒன்று ஆகும். வலிகாமம் கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் அடங்கும் பகுதிகள் இப்பிரதேச சபைக்குள் அடங்குகின்றன. இதன் மொத்தப் பரப்பளவு 102.20 சதுர மைல்கள். இதன் வடக்கில் கடலும்; கிழக்கில் வல்வெட்டித்துறை நகரசபை, தொண்டைமானாறு நீரேரி, வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபை என்பனவும்; தெற்கில் சாவகச்சேரி பிரதேச சபை, நல்லூர் பிரதேச சபை, யாழ்ப்பாண மாநகர சபை என்பனவும்; மேற்கில் நல்லூர் பிரதேச சபை, வலிகாமம் தெற்கு பிரதேச சபை, வலிகாமம் வடக்கு பிரதேச சபை என்பனவும் எல்லைகளாக உள்ளன. இச்சபைக்கான உறுப்பினர்கள் நேரடியாக மக்களால் தெரிவுசெய்யப்படுகின்றனர். 2018 ஆம் ஆண்டு முதல் கலப்பு முறைத் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறைப்படி, வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்கு 22 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 16 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் மொத்தம் 38 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.[1][2]
வலிகாமம் கிழக்கு பிரதேச சபை | |
---|---|
வகை | |
வகை | உள்ளூராட்சி |
தலைமை | |
தலைவர் | |
துணைத் தலைவர் | |
உறுப்பினர்கள் | 38 |
தேர்தல்கள் | |
அண்மைய தேர்தல் | இலங்கை உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள், 2018 |