வாரணாசி
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மாநகராட்சி / From Wikipedia, the free encyclopedia
காசி என்றும் பெனாரஸ் என்றும் அழைக்கப்படும் வாரணாசி (Varanasi, (Hindustani pronunciation: [ʋaːˈraːɳəsi] ( listen)), இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் மாநகராட்சி மன்றத்துடன் கூடிய நகரமாகும். கங்கைக் கரையில் அமைந்த இந்நகர், இந்து சமயத்தினரின் ஆன்மிகத் தலைநகராகவும், அனைத்து இந்துக் கலைகளின் காப்பகமாகவும் விளங்குகிறது. முக்தி தரும் ஏழு நகரங்களில் வாரணாசியும் ஒன்று. இந்நகரம் பொ.ஊ.மு. 1800 ஆண்டுகளுக்கு மேல், மக்கள் தொடர்ந்து வாழும் பண்டைய நகரங்களில் ஒன்றாகும்.[4]
வாரணாசி
वाराणसी | |
---|---|
காசி புனித நகரம் | |
அடைபெயர்(கள்): இந்தியாவின் ஆன்மிகத் தலைநகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தரப்பிரதேசம் |
மாவட்டம் | வாரணாசி மாவட்டம் |
அரசு | |
• மேயர் | ராம் கோபால் மொலே பி.ஜே.பி |
• எம். பி | நரேந்திர மோடி பி.ஜே.பி |
பரப்பளவு | |
• மாநகராட்சி | 3,131 km2 (1,209 sq mi) |
ஏற்றம் | 80.71 m (264.80 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மாநகராட்சி | 12,01,815 |
• தரவரிசை | 30வது இடம் |
• அடர்த்தி | 380/km2 (990/sq mi) |
• பெருநகர் | 14,35,113 |
மொழிகள் | |
• அலுவலக மொழி | இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
அஞ்சலக சுட்டு எண் | 221 001 to** (** area code) |
தொலைபேசிக் குறியீடு | 0542 |
வாகனப் பதிவு | UP 65 |
ஆண்-பெண் பாலின விகிதம் | 0.926 (2011) ♂/♀ |
எழுத்தறிவு (2011) | 80.12%[3] |
இணையதளம் | varanasi |
இங்குள்ள காசி விசுவநாதர் ஆலயத்திலுள்ள லிங்கம், சைவ சமயத்தினரின் புகழ் பெற்ற பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களுள் ஒன்றாகும். பண்டைய காலங்களில் கல்விக்கூடங்கள் பல அமைந்து கல்வியிற் சிறந்த இடமாக விளங்கியது வாரணாசி. இங்கு தயாரிக்கப்படும் பெனாரஸ் பட்டுப் புடவைகள் மிகப் பிரபலமானவை. வாரணாசி பனாரசு இந்து பல்கலைக்கழகம் இந்தியாவில் புகழ்பெற்ற கல்வி மற்றும் தொழிற்கல்வி நிலையமாகும்.