விக்கிப்பீடியா:நடைக் கையேடு
From Wikipedia, the free encyclopedia
நடைக் கையேடு , கட்டுரைகளின் நடை எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்கான நெறிமுறைகளை விளக்கும் கையேடாகும். ஒரே விதமான நடையை அனைவரும் பின்பற்றுவது கட்டுரைகளைப் படிப்பவர்களுக்கு எளிதாகப் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும்.
இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் (மைசூர்), மொழி அறக்கட்டளை (சென்னை) மற்றும் தமிழ்ப் பல்கலைக்கழகம் (தஞ்சாவூர்) ஆகிய அமைப்பினரால் இணைந்து உருவாக்கப்பட்டு அடையாளம் பதிப்பின் மூலம் வெளிவந்த தமிழ் நடைக் கையேடு என்ற நூலில் சீர்நடையின் தேவையைப் பற்றி பின்வருமாறு விளக்குகிறார்கள்.
“ | ஒரு மொழியில் அடிப்படை அறிவு என்பது அந்த மொழியில் உள்ள எழுத்துக்களையும் சொற்களையும் அவற்றின் பொருளையும் வாக்கிய அமைப்புகளையும் தெரிந்திருப்பதே. மேலே குறிப்பிட்ட நான்கையும் உள்ளடக்கியது ஒரு மொழியின் இலக்கணம். இந்த இலக்கணத்திற்கு அப்பாலும் உரைநடையில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் உள்ளன. இந்த நெறிமுறைகளைப் பின்பற்றினால் எழுதுவது சீராகவும் கருத்து வெளிப்படுவது தெளிவாகவும் இருக்கும். | ” |
- நன்னூலில் கூறப்பட்டுள்ள பத்து குற்றங்களும் பத்து அழகுகளும் தமிழ் விக்கிப்பீடியாவுக்கும் பெரும்பாலும் பொருந்தும். தக்கவாறு பயன்படுத்துதல் நல்லது.
பத்துக் குற்றம்
குன்றக் கூறல் மிகைபடக் கூறல்
கூறியது கூறல் மாறுகொளக் கூறல்
வழூஉச்சொல் புணர்த்தல் மயங்க வைத்தல்
வெற்று எனத் தொடுத்தல் மற்று ஒன்று விரித்தல்
சென்று தேய்ந்து இறுதல் நின்று பயன் இன்மை
என்று இவை ஈரைங் குற்றம் நூற்கே
பத்து அழகு
சுருங்கச் சொல்லல் விளங்க வைத்தல்
நவின்றோர்க்கு இனிமை நல் மொழி புணர்த்தல்
ஓசை உடைமை ஆழம் உடைத்தாதல்
முறையின் வைப்பே உலகம் மலையாமை
விழுமியது பயத்தல் விளங்கு உதாரணத்தது
ஆகுதல் நூலிற்கழகு எனும் பத்தே
| ||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||