From Wikipedia, the free encyclopedia
ஆப்கானிஸ்தானின் தேசிய எதிர்ப்பு முன்னணி அல்லது பஞ்ச்சிர் கிளர்ச்சிக் குழு (Panjshir resistance or National Resistance Front of Afghanistan),[2][4][5] இதனை இரண்டாம் கிளர்ச்சி என்றும் அழைப்பர்.[6] 15 ஆகஸ்டு 2021 அன்று தாலிபான்களால் காபூலின் வீழ்ச்சி அடைந்த பின்னர், தாலிபான்கள் அமைக்கும் அரசில் சம உரிமை கேட்கும் இக்குழுவினர், தாலிபான்களை எதிர்க்கும் வடக்குக் கூட்டணிப் படைகளை 17 ஆகஸ்டு 2021 முதல் சீரமைத்து வருகின்றனர். இக்கிளர்ச்சிக் குழுவின் தலைவராக அகமது ஷா மசூத்தின் மகன் அகமது மசூத் உள்ளார். மேலும் ஆப்கானித்தான் துணை அதிபர் அம்ருல்லா சலே இக்குழவில் இணைந்துள்ளார்.[7]
ஆப்கானிஸ்தானின் தேசிய எதிர்ப்பு முன்னணி பாஞ்சிர் கிளர்ச்சிக் குழு | |
---|---|
ஆப்கானித்தான் போர்
| |
தாலிபான்களை எதிர்க்கும் ஆப்கானித்தான் தேசியக் கொடி மற்றும் பஞ்ச்சிரின் வடக்குக் கூட்டணிக் கொடி [1][2][3] | |
இயங்கிய காலம் | 16 ஆகஸ்டு 2021 – தற்போது வரை |
தலைவர்கள் | அகமது மசூத் அம்ருல்லா சலே பிஸ்மில்லா கான் மொகம்மதி |
செயற்பாட்டுப் பகுதி |
ஆப்கானித்தானின், பாஞ்ச்சிர் மாகாணம், பக்லான் மாகாணம் மற்றும் பர்வான் மாகாணம் |
எதிராளிகள் | தாலிபான்/ஆப்கானித்தான் இசுலாமிய அமீரகம் |
காபூலின் வீழ்ச்சிக்குப் பின்னரும் தாலிபான்களால் இதுவரை கைப்பற்றப்பட முடியாத பாஞ்ச்சிர் மாகாணத்தின் பாஞ்ச்சிர் சமவெளியை, ஆப்கானிஸ்தானின் தேசிய எதிர்ப்பு முன்னணிப் படைகளின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.[8][9]
தாலிபான்களை எதிர்க்கும் ஆப்கானித்தானின் ஒரே படையான ஆப்கானித்தான் தேசிய எதிரிப்பு முன்னணிப் படையின் கொரில்லாத் தாக்குதல்களில் புகழ்பெற்றவர்கள். .[7][10][11][12]
17 ஆகஸ்டு 2021 அன்று தாலிபான்களை எதிர்க்கும் ஆப்கானித்தான் துணை அதிபர் அம்ருல்லா சலே தன்னை ஆப்கானித்தானின் இடைக்கால அதிபராக அறிவித்துக் கொண்டதுடன், தாலிபான்களுக்கு எதிராக, பாஞ்ச்சிர் சமவெளியிலிருந்து போராடப் போவதாக அறிவித்தார்.[13] அம்ருல்லா சலேவின் அறிக்கையை, அகமது மசூத், ஆப்கானித்தானின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் பிஸ்மில்லா மொகம்மதி, ஆப்கானின் தஜிகிஸ்தான் தூதர் மொகம்மத் சாகீர் அக்பாரும் ஆதரித்தனர். [7][12][13]
ஆப்கானித்தானின் பக்லாம் மாகாணத்தில் 20 ஆகஸ்டு 2021 அன்று அப்துல் அமீத் தாத்கர் தலைமையில் தாலிபான் எதிர்ப்படைகள் அமைக்கப்பட்டது.[14] இக்கிளர்ச்சிப் படையினர் தாலிபான்கள் வசமிருந்த அந்தராப் மாவட்டம், புலி இசாம் மாவட்டம் மற்றும் திக் சலே மாவட்டங்களை தங்கள் ஆளுகையின் கொண்டு வந்தனர்.[15]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.