ஆப்கானித்தான் இசுலாமிய அமீரகம்

From Wikipedia, the free encyclopedia

ஆப்கானித்தான் இசுலாமிய அமீரகம்
Remove ads

ஆப்கானித்தான் இசுலாமிய அமீரகம் (Islamic Emirate of Afghanistan)[7] (பஷ்தூ: د افغانستان اسلامي امارات, ட ஆப்கானிஸ்தான் இஸ்லாமி அமாரத்) 1996இல் தாலிபான்கள் ஆப்கானித்தானை ஆண்டபோது நிறுப்பட்ட அரசாகும்; 2001இல் அவர்களது வீழ்ச்சியுடன் இதுவும் முடிவுற்றது. தாலிபான்கள் உச்சத்தில் இருந்தபோது கூட அவர்கள் முழுமையான ஆப்கானித்தானை ஆளவில்லை; வடகிழக்கில் 10% நிலப்பகுதியின் ஆட்சி வடக்குக் கூட்டணி வசம் இருந்தது.[8]

விரைவான உண்மைகள் ஆப்கானித்தான் இசுலாமிய அமீரகம்د افغانستان اسلامي امارت (Pashto)Də Afġānistān Islāmī Imārat, தலைநகரம் ...
Remove ads

தாலிபான்களின் இரண்டாவது அமீரகம்

அமெரிக்காவிடமிருந்து 15 ஆகஸ்டு 2021 அன்று ஆப்கானித்தானை கைப்பற்றிய தாலிபான்களின் ஆப்கானித்தான் இசுலாமிய அமீரகத்தின் இடைக்கால அரசின் பிரதம அமைச்சராக 7 செப்டம்பர் 2021 அன்று முகமது அசன் அகுந்து மற்றும் துணைப் பிரதமர்களாக அப்துல் கனி பராதர் மற்றும் மௌலவி ஹனாபி தேர்வு செய்யப்பட்டதாகவும், மேலும் அமைச்சரவையில் 19 கேபினெட் [தெளிவுபடுத்துக]அமைச்சர்களும், 11 துணை அமைச்சர்களும், இயக்குநர்களும் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தாலிபான்களின் செய்தித் தொடர்பாளர் சஃபியுல்லா முஜாகிதின் அறிவித்துள்ளார்.[9][10][11][12]

முல்லா ஓமர் தலைமையில் 1996 - 2001 ஆண்டுகளில் நடைபெற்ற தாலிபான்களின் முதல் அரசுக்குப் பின், 20 ஆண்டுகளுக்குப் பின்னர் இது தாலிபான்களால் மீண்டும் தற்போது நிறுவப்படும் இரண்டாவது அரசாகும்.

Remove ads

மேற்சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads