ஓட்ரான்டோ நீரிணை அல்லது ஓட்ரான்டோ ஜலசந்தி ( Strait of Otranto , அல்பானிய மொழி : இத்தாலியம்: Canale d'Otranto , செருபோகுரோவாசிய மொழி : Otranska Vrata ) என்பது ஏட்ரியாட்டிக் கடலை அயோனியன் கடலுடன் இணைத்தும் மற்றும் இத்தாலியை அல்பேனியாவிலிருந்து பிரிக்கும் நீரிணையாகும். இந்த நீரிணையின் அகலமானது , சாலெண்டோவின் கிழக்கே புண்டா பாலாஸ்கியா பகுதியில் அதன் அகலம் 72 கிலோமீட்டருக்கும் (45 மைல்) குறைவாக உள்ளது. இந்த நீரிணைக்கு இத்தாலிய நகரமான ஓட்ரான்டோ நகரின் பெயரிடப்பட்டது.

Thumb
வயோரா விரிகுடா
Thumb
ஒட்ரான்டோ துறைமுகம்

வரலாறு

பண்டைய காலங்களிலிருந்து ஒட்ரான்டோ நீர்சந்தியானது இன்றியமையாத ஒரு படைத்துறை முக்கியத்துவம் வாய்ந்தத பகுதியாக இருந்து வந்தது. ரோமானியர்கள் தங்கள் கடற் படைகளை கிழக்கு நோக்கி கொண்டு செல்ல இதைப் பயன்படுத்தினர். படையினர் புருண்டீசியத்திற்கு (இப்போது பிரிண்டிசி) அணிவகுத்துச் சென்றனர், நவீன அல்பேனியா பகுதிக்கு ஒரு நாள் கடல் பயணத்தை மேற்கொண்டாலே போதுமானதாக இருந்தது , பின்னர் எக்னேஷியா வழியாக அவர்கள் கிழக்கு நோக்கி நகர்ந்தனர்.

Thumb
17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்த ஒரு வரைபடத்தில் ஓட்ரான்டோ நீரிணை

முதலாம் உலகப் போர்

முதலாம் உலகப் போரின்போது, இந்த நீரிணையானது கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. இத்தாலி இராச்சியம், பிரான்ஸ் இராச்சியம் மற்றும் பெரிய பிரித்தானியாவை உள்ளடக்கிய நேச நாட்டு கடற்படைகள், பெரும்பாலும் இலகுவான கடற்படைப் படைகள் மற்றும் 'டிரிப்டர்ஸ்' என்று அழைக்கப்படும் இலகுவான ஆயுதம் ஏந்திய மீன்பிடிக் கப்பல்களைக் கொண்டு, விழிப்புடன் இருந்த ஆஸ்ட்ரோ-ஹங்கேரிய கடற்படையை சுதந்திரமாக மத்தியதரைக் கடலுக்குள் நுழைவதைத் தடுத்தன. மேலும் அவர்களை போர்க் கடற்படை களத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். இந்த முற்றுகை ' ஓட்ரான்டோ பேரேஜ் ' என்று அழைக்கப்பட்டது.

எவ்வாறாயினும், அட்ரியாடிக்கிலிருந்து இயங்கும் ஜேர்மன் யு-படகுகளுக்கு எதிராக மோசமான தடையாக இருந்தது, அவை மத்தியதரைக் கடல் முழுவதும் போரின் பெரும்பகுதிக்கு நேச நாடுகளின் சக்திகளைப் பாதித்தன. [1]

இரும்புத்திரை வீழ்ச்சிக்குப் பிறகு

1992 ஆம் ஆண்டில், அல்பேனியா மற்றும் இத்தாலி ஆகியவை ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதன்படி இரு நாடுகளுக்கும் இடையிலான கண்டத் திட்டு எல்லையை நீரிணையில் பிரித்தது.

வளமான வாழ்க்கையை வாழ வேண்டி ஏழ்மை மிக்க பொருளாதார மந்த நிலையில் இருந்த அல்பேனிய நாட்டில் இருந்து சட்டவிரோதமாக இந்த நீரிணையைக் கடக்க முயன்று, 1997 மற்றும் 2004 ஆம் ஆண்டில், கிட்டத்தட்ட 100 பேர் சட்டவிரோதமாக இந்த நீரிணையைக் கடக்க முயற்சிக்கையில் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். காரணம் அல்பேனியாவில் 1997 இல் நிலவிய அமைதியின்மை மற்றும் மோசமான பொருளாதார நிலை,   ஒட்ரான்டோ துயரங்கள் மற்றும் கராபுருன் சோகம் போன்றவை ஆகும்.

2006 ஆம் ஆண்டில், அல்பேனிய அரசாங்கமானது இந்த கூட்டுக் குற்றங்களைக் கட்டுப்படுத்த அல்பேனியாவின் அனைத்து ஏரிகள், ஆறுகள் மற்றும் கடல் பகுதிகளிலும் மோட்டார் மூலம் இயங்கும் படகோட்டிகளுக்கு தடை விதித்தது. [2] அரசுக்கு சொந்தமான படகுகள், வெளிநாட்டுக்கு சொந்தமான படகுகள், மீன்பிடி படகுகள் மற்றும் ஜெட் படகுகள் போன்றவைக்கு மட்டுமே இதில் அல்பேனிய அரசால் விதிவிலக்கு அளிக்கப்பட்டது. இந்த தடைக்காலமானது 2010 ஆம் ஆண்டில், மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது. இதனால் இந்த்த் தடைக் காலமானது 2013 ஆண்டு வரை நடப்பில் இருந்தது என்பது குறிப்பிடத் தக்கது.

குறிப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.