கேரளாவின் கொல்லம் நகரில் உள்ள ஓர் ஏரி From Wikipedia, the free encyclopedia
கட்டக காயல் (Kattaka Kayal) இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள கொல்லம் நகரில் உள்ள ஒரு நன்னீர் ஏரியாகும். இந்த ஏரி வட்டக்காயலை இணைக்கிறது, 36-ஏக்கர் (15 ha) பரப்பளவில் மருதடியில் உள்ளது. இதனுடன் நகரத்தில் அசுட்டமுடி ஏரியும் உள்ளது. .[2][3][4]
கட்டக காயல் Kattaka Kayal | |
---|---|
கட்டகாயல் | |
அமைவிடம் | இந்தியா,கொல்லம், சக்திகுளங்கரா |
ஆள்கூறுகள் | 8°55′23.0268″N 76°32′39.2136″E |
வகை | ஓடை |
Part of | அசுட்டமுடி ஏரி |
முதன்மை வரத்து | மருதடியில் வட்டக்காயல் |
வடிநிலப் பரப்பு | 14.5 ha (0.056 sq mi)[1] |
வடிநில நாடுகள் | இந்தியா |
மேலாண்மை முகமை | கொல்லம் மாநகராட்சி |
பதவி | சாகர சம்சுகாரிகா சங்கம் |
அதிகபட்ச நீளம் | 2 km (1.2 mi) |
அதிகபட்ச அகலம் | 30 m (0.030 km) |
மேற்பரப்பளவு | 36 ஏக்கர்கள் (15 ha) |
Islands | இல்லை |
குடியேற்றங்கள் | கொல்லம் |
கட்டக் காயல் என்பது கொல்லத்தில் உள்ள அசுட்டமுடி ஏரி மற்றும் வட்டக்காயலின் ஒரு பகுதியாகும். இரண்டு கிலோமீட்டர் நீளம் கொண்ட ஒரு நீரோடை ஒரு காலத்தில் சக்திகுளங்கராவில் உள்ள பெரும்பாலான வணிக நடவடிக்கைகளுக்கு உயிர்நாடியாக இருந்தது. 50 ஆண்டுகளுக்கு முன் அதன் அகலம் 90 முதல் 120 மீட்டர்கள் (300 முதல் 390 அடி) ஆகும். அப்போது கட்டக காயல் பாதையில் மூன்று படகுத் துறைகள் இருந்தன, மேலும் கடல் உணவுப் பொருட்களை ஏற்றுவதற்கும் இறக்குவதற்கும் பெரிய சரக்குக் கப்பல்கள் நிறுத்தப்படுவது அந்த நாட்களில் குயிலான் நகரத்தின் பொதுவான காட்சியாக இருந்தது. இது கரிமீன் மற்றும் பூமீன் உட்பட 20 க்கும் மேற்பட்ட உண்ணக்கூடிய மீன்களின் இருப்பிடமாகவும் இருந்தது.[2][5]
வட்டகாயல் மற்றும் கட்டக காயல் மறுமலர்ச்சி திட்டம் கொல்லத்தில் 1 நவம்பர் 2016 அன்று கொல்லம் மாநகராட்சி மேயர் வி. இராசேந்திரபாபு அவர்களால் தொடங்கப்பட்டது.[6] கட்டகாயல் புனர்சீவன பத்தாடி என்பது சக்திகுளங்கரை சார்ந்த கலாச்சார அமைப்பான சாகர சம்சுகாரிகா சங்கத்தின் ஒரு முன் முயற்சியாகும்.[7] இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், ஏரியை சுத்தம் செய்தல் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை உள்ளடக்கிய பல்வேறு கட்டங்களின் மூலம் இரண்டு ஏரிகளையும் புதுப்பிக்க வேண்டும் என்பதாகும்.[8]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.