From Wikipedia, the free encyclopedia
கால்சியம் ஆக்சைடு (Calcium Oxide) (CaO), பொதுவாக நீறாத சுண்ணாம்பு அல்லது சுட்ட சுண்ணாம்பு என அழைக்கப்படக்கூடிய, பரவலாகப் பயன்படக்கூடிய வேதிச் சேர்மம் ஆகும். இது ஒரு வெண்ணிற, காரத்தன்மை மற்றும் அரிக்கும் தன்மையுடைய படிகத் திண்மம் ஆகும். அறை வெப்பநிலையில் இது திண்மமாகக் காணப்படுகிறது. பரவலாகப் பயன்படுத்தப்படும் சுண்ணாம்பு என்ற வார்த்தையானது, கால்சியம், சிலிகான், மெக்னீசியம், அலுமினியம் மற்றும் இரும்பு ஆகியவை விஞ்சிநிற்கும் கார்பனேட்டுகள், ஆக்சைடுகள், ஐதராக்சைடுகள் போன்ற கனிமப் பொருட்களைப் பொருளுணர்த்துவதாக உள்ளது. இதற்கு மாறாக, சுட்ட சுண்ணாம்பு என்பது கால்சியம் ஆக்சைடு என்ற ஒரேயொரு வேதிச் சேர்மத்தை மட்டுமே குறிக்கப் பயன்படும் பெயராக உள்ளது. கட்டுமானப் பொருட்களான சிமெண்ட் போன்றவற்றில் வினையேதும் புரியாது நீடிக்கின்ற கால்சியம் ஆக்சைடானது தனித்த சுண்ணாம்பு என அழைக்கப்படுகிறது.[5]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
கால்சியம் ஆக்சைடு | |
வேறு பெயர்கள்
சுட்ட சுண்ணாம்பு, நீற்றாத சுண்ணாம்பு, ஈரப்படுத்தாத சுண்ணாம்பு, சுண்ணாம்பு கூழாங்கல், கால்சியா | |
இனங்காட்டிகள் | |
1305-78-8 | |
ChEBI | CHEBI:31344 |
ChEMBL | ChEMBL2104397 |
ChemSpider | 14095 |
Gmelin Reference |
485425 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 14778 |
வே.ந.வி.ப எண் | EW3100000 |
| |
UNII | C7X2M0VVNH |
UN number | 1910 |
பண்புகள் | |
CaO | |
வாய்ப்பாட்டு எடை | 56.0774 கி/மோல் |
தோற்றம் | வெண்மையிலிருந்து வெளிர் மஞ்சள் வரை/பழுப்பு பொடி |
மணம் | மணமற்றது |
அடர்த்தி | 3.34 கி/செமீ3 |
உருகுநிலை | 2,613 °C (4,735 °F; 2,886 K)[1] |
கொதிநிலை | 2,850 °C (5,160 °F; 3,120 K) (100 hPa)[2] |
வினைபுரிந்து கால்சியம் ஐதராக்சைடைத் தருகிறது | |
Methanol-இல் கரைதிறன் | கரைவதில்லை (டைஎதில் ஈதரில் கூட), n-octanol) |
காடித்தன்மை எண் (pKa) | 12.8 |
−15.0·10−6 செமீ3/மோல் | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | கன சதுர படிக அமைப்பு, cF8 |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
−635 கிஜுல்மோல்−1[3] |
நியம மோலார் எந்திரோப்பி S |
40 ஜுல்மோல்−1·கெல்வின்−1[3] |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | Hazard.com |
தீப்பற்றும் வெப்பநிலை | தீப்பற்றாதது [4] |
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்: | |
அனுமதிக்கத்தக்க வரம்பு |
TWA 5 மிகி/மீ3[4] |
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு |
TWA 2 மிகி/மீ3[4] |
உடனடி அபாயம் |
25 மிகி/மீ3[4] |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | கால்சியம் சல்பைடு கால்சியம் ஐதராக்சைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | பெரிலியம் ஆக்சைடு மெக்னீசியம் ஆக்சைடு இசுட்ரான்சியம் ஆக்சைடு பேரியம் ஆக்சைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
சுட்ட சுண்ணாம்பானது செலவில்லாத அல்லது விலை மலிவான ஒரு பொருளாக உள்ளது. இச்சேர்மம் மற்றும் இதனுடைய வேதியியல் வழிப்பொருளான கால்சியம் ஐதராக்சைடு ஆகிய இரண்டுமே பயன்பாட்டில் உள்ள வேதிப்பொருட்களாக உள்ளன.
வழக்கமாக, கால்சியம் ஆக்சைடானது கால்சியம் கார்பனேட்டைக் கொண்டுள்ள சுண்ணாம்புக்கல், கிளிஞ்சல் ஓடுகள் போன்ற பொருட்களை சுண்ணாம்புச் சூளையிலிட்டு வெப்பச்சிதைவிற்கு உட்படுத்துவதால் தயாரிக்கப்படுகிறது. இந்த வினையானது 825 °C (1,517 °F) என்ற வெப்பநிலைக்கு மேல்[6] வெப்பப்படுத்தும் போது நிறைவடைகிறது. இந்தச் செயல்முறையானது சுண்ணமாக்குதல் செயல்முறை என அழைக்கப்படுகிறது. இந்த வினையில் கால்சியம் கார்பனேட்டில் உள்ள கார்பனீராக்சைடு (CO2),வாயுவை வெளியேற்றி சுட்ட சுண்ணாம்பை விட்டுச் செல்கிறது.
சுட்ட சுண்ணாம்பானது நிலையான சேர்மமாக இல்லை. இச்சேர்மத்தை நீருடன் சேர்த்து சுண்ணக்கலவை அல்லது சுண்ணக்காரையாக மாற்றாத வரை, குளிர்விக்கப்படும்போது தன்னிச்சையாக காற்றில் உள்ள கார்பன் டை ஆக்சைடுடன் (CO2) போதுமான அளவிற்கு வினைப்பட்டு முழுவதுமாக கால்சியம் கார்பனேட்டாக மாறிவிடுகிறது.
சுட்ட சுண்ணாம்பின் ஆண்டு உற்பத்தி ஏறத்தாழ 283 மில்லியன் டன்களாகும். ஆண்டொன்றுக்கு 170 மில்லியன் டன்களுடன் சீனாவானது இது வரையிலும் உலகின் மிகப்பெரிய உற்பத்தியாளராகத் திகழ்கிறது. அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஆண்டொன்றுக்கு 20 மில்லியன் டன்களுடன் இரண்டாவது பெரிய உற்பத்தியாளராக விளங்குகிறது.[7]
தோராயமாக, 1.8 டன்கள் சுண்ணாம்புக்கல், 1.0 டன் சுட்ட சுண்ணாம்பினைத் தயாரிக்கத் தேவைப்படுகிறது. சுட்ட சுண்ணாம்பானது நீரின் மீது மிக அதிக நாட்டத்தைக் கொண்டுள்ளதால் சிலிகா களியைக் காட்டிலும் மேலும் திறனுடைய நீருறிஞ்சு பொருளாக உள்ளது. சுட்ட சுண்ணாம்பு நீருடன் வினைப்படும் போது அதன் கன அளவானது 2.5 மடங்கு அதிகரிக்கிறது.[8]
கி.மு 80 இல் ரோமானிய படைத்தளபதி இசுடீரியசு, இசுபானியாவின் கேரசிடேனியன்களுக்கு (டேகசு நதிக்கு அப்பால் மலைப்பகுதிகளில் வாழக்கூடிய மக்கள்) எதிரான போரில் பரவலாக அடைக்கக்கூடிய எரிசுண்ணாம்புத்துாளால் ஆன மேகங்களைப் பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளார். இந்த மக்கள் எளிதில் அடைய முடியாத உயரமான மலைகளில் உள்ள குகைகளில் வாழ்ந்து வந்தனர். கி.பி.178 ஆம் ஆண்டில் சீனாவில் நடந்த ஆயுதம் தாங்கிய விவசாயிகளின் போராட்டத்தைத் தணிக்க இதே போன்ற ஒரு தூளானது ”சுண்ணாம்பு இரதங்கள்” எனப்படும் வாகனங்களில் உலைத்துருத்திகளில வைத்து கூட்டமான பகுதிகளில் ஊதிவிடப்பட்டது.[14] இங்கிலாந்து நாட்டின் வரலாறு என்னும் நூலில் அதன் ஆசிரியர் டேவிட் கியூம் இங்கிலாந்தின் மூன்றாம் என்றி என்ற அரசரின் ஆட்சிக்காலத்தில் பிரெஞ்சு கப்பற்படையின் படையெடுப்பை இங்கிலாந்து கடற்படை சுட்ட சுண்ணாம்பினை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி (அதாவது கடற்படை வீரர்களின் கண்களை சுண்ணாம்பால் காயப்படுத்தி) வெற்றி கண்டது. [15] சுட்ட சுண்ணாம்பானது இடைக்காலத்திலிருந்து தொடங்கி கடற்படைப் போர்களில் சுண்ணாம்புச்சேறாக எதிரிகளின் கப்பல்களில் வீசி எறியப்படும் காலம் வரை தொடர்ந்து பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.[16]
நீருடனான சுட்ட சுண்ணாம்பின் தீவிரமான வினையின் காரணமாக சுட்ட சுண்ணாம்பானது சுவாசிக்கும்போதோ, ஈரமான தோல் மற்றும் கண்களில் பட்டாலோ, தீவிரமான எரிச்சலை உண்டாக்கக்கூடியது. இதைச் சுவாசித்தல் இருமல், தும்மல், சிரமமான சுவாசம் ஆகியவற்றை உண்டாக்கலாம். மூக்கிடைத் தசைகளில் எரிச்சலூட்டும் காயங்கள், அடிவயிற்று வலி, குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவற்றையும் ஏற்படுத்தலாம். சுட்ட சுண்ணாம்பு தீ விபத்து போன்ற ஆபத்துக்களை உருவாக்காது. இருப்பினும், நீருடனான இச்சேர்மத்தின் வினை எரியக்கூடிய பொருட்களை தீப்பற்ற வைக்கும் அளவுக்கான வெப்பத்தை உருவாக்கலாம்.[17]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.