From Wikipedia, the free encyclopedia
குரோமியம்((III) புளோரைடு (Chromium(III) fluoride) என்பது CrF3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும் இதே மூலக்கூற்று வாய்ப்பாடு குரோமியத்தின் பல்வேறு நீரேற்றுகளுக்கும் பொருந்தும். பச்சை நிறத்துடன் படிகங்களாகக் காணப்படும் இச்சேர்மம் பொதுவானக் கரைப்பான்களில் கரையாது. ஆனால் வண்ண நீரேற்றுகளான [Cr(H2O)6]F3 மற்றும் [Cr(H2O)6]F3•3H2O போன்றவை நீரில் கரைகின்றன. முந்நீரேற்று வகை பச்சையாகவும், அறுநீரேற்று வகை கருநீலத்திலும் காணப்படுகின்றன. நீரிலி வகை புளோரைடு 1100 முதல் 1200 °செல்சியசு வெப்பநிலையில் பதங்கமாகிறது. அனைத்துக் குரோமியம்(III) சேர்மங்களையும் போல இப்புளோரைடுகளும் எண்முக குரோமியம் மையங்களுடன் தோற்றமளிக்கின்றன. நீரிலி வகையில் , ஆறு ஒருங்கிணைவுத் தளங்கள் அடுத்துள்ள குரோமியம் மையங்களுடன் பாலமிட்டுள்ள புளோரைடு ஈந்தணைவிகளால் நிரப்பப்பட்டுள்ளன. நீரேற்று வடிவங்கள் அணைத்திலும் புளோரைடு ஈந்தணைவிகள் தண்ணீர் மூலக்கூறுகளால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டுள்ளன[2].
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
குரோமியம்((III) புளோரைடு | |
வேறு பெயர்கள்
குரோமியம் முப்புளோரைடு | |
இனங்காட்டிகள் | |
7788-97-8 16671-27-5 (முந்நீரேற்று) 123333-98-2 (நான்கு நீரேற்று) | |
ChemSpider | 8329529 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 10154021 |
வே.ந.வி.ப எண் | GB6125000 |
| |
பண்புகள் | |
CrF3 | |
வாய்ப்பாட்டு எடை | 108.9913 கி/மோல் (நீரிலி) 163.037 கி/மோல் (முந்நீரேற்று) 181.05 கி/மோல் (நான்கு நீரேற்று) |
தோற்றம் | பச்சை நிறப் படிகங்கள் |
அடர்த்தி | 3.8 கி/செ.மீ3 (நீரிலி) 2.2 கி/செ.மீ3 (முந்நீரேற்று) |
உருகுநிலை | 1,100 °C (2,010 °F; 1,370 K) (பதங்கமாகும்) |
மிகக்குறைவு (நீரிலி) கரையும் (முந்நீரேற்று) | |
கரைதிறன் | ஆல்ககாலில் கரையாது HF, HCl போன்றவற்றில் கரையும் |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | சாய்சதுரம், hR24 |
புறவெளித் தொகுதி | R-3c, No. 167 |
தீங்குகள் | |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose) |
150 மி.கி/கி.கி (கினியா பன்றி, வாய்வழி) |
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்: | |
அனுமதிக்கத்தக்க வரம்பு |
TWA 1 மி.கி/மீ3[1] |
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு |
TWA 0.5 மி.கி/மீ3[1] |
உடனடி அபாயம் |
250 மி.கி/மீ3[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
குரோமியம்(III) ஆக்சைடு மற்றும் ஐதரோபுளோரிக் அமிலம் இரண்டும் வினைபுரிந்து குரோமியம்((III) புளோரைடு உருவாகிறது:[3]
ஐதரசன் புளோரைடு மற்றும் குரோமிக் குளோரைடு இரண்டும் வினைபுரிவதால் நீரிலி வகை குரோமியம்((III) புளோரைடு உருவாகிறது:[4]
குரோமியம்((III) புளோரைடு அதிகமாகப் பயன்படுத்தப்படுவதில்லை என்றாலும் நெசவுத் தொழிலில் நிறம் நிறுத்தியாகவும் , அரிப்புத் தடுப்பியாகவும் பயன்படுத்தப்படுகிறது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.