மேற்கு வங்காளத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
கூச் பெகர் மாவட்டம் (Cooch Behar district) (Pron: ˈku:ʧ bihɑ:) (வங்காள மொழி: কোচবিহার জেলা, Rajbongshi/Kamatapuri : কোচবিহার) இந்தியா, மேற்கு வங்காள மாநிலத்தில் அமைந்த 23 மாவட்டங்களில் ஒன்றாகும். பிரித்தானியா இந்தியா அரசு காலத்தில் கூச் பெகர், ஒரு மன்னராட்சிப் பகுதியாக இருந்தது. குறைந்த மக்கட்தொகை கொண்ட மேற்கு வங்கத்தின் 19 மாவட்டங்களில், கூச் பெகர் மாவட்டம் மூன்றாம் இடத்தில் உள்ளது. இமயமலையின் தராய் பகுதியில் அமைந்த மாவட்டம். ஒரு நாடாளுமன்ற தொகுதியும், எட்டு சட்டமன்ற தொகுதிகளையும் கொண்டது இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் கூச் பெகர் நகரம் ஆகும். [1]
கூச் பெகர் மாவட்டம் | |
---|---|
மேல்-இடதுபுறத்திலிருந்து கடிகார திசையில்: கூச் பெகர் அரண்மனை, துபாங்கஞ்ச் அருகே பாயும் கதாதர் ஆறு, கோசானிமாரியில் ராஜ்பத் மலை, கூச் பெகர் அருகே பாயும் தோர்சா ஆறு, மதன் மோகன் கோவில் | |
மேற்கு வங்காளத்தில் கூச் பெகாரின் அமைவிடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மேற்கு வங்காளம் |
நிர்வாகப் பிரிவு | ஜல்பைகுரி |
தலைமையகம் | கூச் பெகர் |
அரசு | |
• மக்களவைத் தொகுதி | கூச் பெகார் |
• சட்டப் பேரவைத் தொகுதி | மாதபங்கா, வடக்கு கூச் பெகார், தெற்கு கூச் பெகார், சித்தால்குச்சி, சீத்தாய், தீன்கத்தா, நட்டாபரி, துபாங்கஞ்ச் |
பரப்பளவு | |
• Total | 3,387 km2 (1,308 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• Total | 28,19,086 |
• அடர்த்தி | 830/km2 (2,200/sq mi) |
• நகர்ப்புறம் | 10.27% |
புள்ளிவிவரம் | |
• கல்வியறிவு | 74.78% (2011) |
• பாலின விகிதம் | 942 (2011) |
நேர வலயம் | ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | மேவ-64 |
முக்கிய நெடுஞ்சாலை | தேசிய நெடுஞ்சாலை 17 |
சராசரி ஆண்டு மழைப்பொழிவு | 3201 மிமீ |
இணையதளம் | coochbehar |
28 ஆகஸ்டு 1949ஆம் ஆண்டிற்கு முன்னர், கூச் பெகர் பகுதி, பிரித்தானிய இந்திய அரசின் கீழ் ஒரு மன்னராட்சி நாடாக விளங்கியது. சர்தார் வல்லபாய் படேலின் முயற்சியால் 12 செப்டம்பர் 1949 அன்று இந்திய ஒன்றியத்துடன் இணைந்து, பின் 19 சனவரி 1950ஆம் ஆண்டில் மேற்கு வங்காள மாநிலத்தின் ஒரு மாவட்டமாக மாறியது.
தீஸ்தா ஆறு, ஜல்தாகா ஆறு, தோர்சா ஆறு, கல்ஜானி, ராய்டக் ஆறு, கதாதர் ஆறு மற்றும் கர்காரியா ஆறு என ஏழு ஆறுகள், கூச் பெகார் மாவட்டத்தின் வடமேற்கிலிருந்து, தென்கிழக்கே பாய்கிறது.
2530.63 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், நெல், புகையிலை, சணல், தென்னை, கடுகு, உருளைக்கிழங்கு பயிரிடப்படுகிறது.
கூச் பெகார் மாவட்டம் நான்கு உட்கோட்டங்கள் கொண்டது;
2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, கூச் பிகார் மாவட்ட மக்கள் தொகை 2,822,780 ஆகும்.[1] மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 833 நபர்கள். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 942 பெண்கள். எழுத்தறிவு விகிதம் 75.49%.
மேலும் பல தனியார் உயர்நிலைப் பள்ளிகளும், அரசு உதவி பெறும் பள்ளிகளும் உள்ளன.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.