கேடிஎம் கொமுட்டர் வடக்கு பகுதி
From Wikipedia, the free encyclopedia
கேடிஎம் கொமுட்டர் வடக்கு பகுதி (மலாய்: KTM Komuter Sektor Utara ஆங்கிலம்: KTM Komuter Northern Sectorr; சீனம்: 马来亚铁道通勤铁路北马区); என்பது தீபகற்ப மலேசியாவின் வடக்குப் பகுதி நகரங்களுக்கு இடையிலான மின்சாரத் தொடருந்து சேவைகளை வழங்கும் கேடிஎம் கொமுட்டர் சேவையின் வடக்குப் பதியைக் குறிப்பதாகும். மலாயா தொடருந்து நிறுவனம் (Keretapi Tanah Melayu Berhad) (KTMB) எனும் நிறுவனத்தின் 5 சேவைகளில் இந்தச் சேவையும் ஒன்றாகும்.
விரைவான உண்மைகள் கேடிஎம் கொமுட்டர் வடக்கு பகுதிKTM Komuter Northern Sector 1 2, கண்ணோட்டம் ...
கேடிஎம் கொமுட்டர் வடக்கு பகுதி KTM Komuter Northern Sector 1 2 | |||
---|---|---|---|
கேடிஎம் 83 ரக கொமுட்டர் வண்டி | |||
கண்ணோட்டம் | |||
உரிமையாளர் | மலாயா தொடருந்து நிறுவனம் | ||
வட்டாரம் | பினாங்கு பெருநகரம், பேராக், கெடா, பெர்லிஸ் | ||
முனையங்கள் | |||
நிலையங்கள் | 20 | ||
இணையதளம் | www | ||
சேவை | |||
வகை | பயணி தொடருந்து | ||
அமைப்பு | கேடிஎம் கொமுட்டர் | ||
சேவைகள் | 1 பட்டர்வொர்த்–பாடாங் ரெங்காஸ் 2 பட்டர்வொர்த்–பாடாங் பெசார் | ||
பாதை எண் | 1, 2 | ||
செய்குநர்(கள்) | மலாயா தொடருந்து நிறுவனம் (கொமுட்டர் பிரிவு) | ||
பணிமனை(கள்) | புக்கிட் தெங்கா | ||
சுழலிருப்பு | KTM Class 81 3-car formation KTM Class 83 3-car formation KTM Class 92 6-car formation | ||
வரலாறு | |||
திறக்கப்பட்டது | 11 செப்டம்பர் 2015 (2015-09-11) | ||
தொழில்நுட்பம் | |||
வழித்தட நீளம் | பட்டர்வொர்த்–பாடாங் ரெங்காஸ்: 104 km (65 mi) பட்டர்வொர்த்–பாடாங் பெசார்: 169.8 km (105.5 mi) | ||
தட அளவி | 1,000 மிமீ (3 அடி 3 3⁄8 அங்) | ||
மின்மயமாக்கல் | 25 kV 50 Hz | ||
இயக்க வேகம் | 120 km/h (75 mph) | ||
|
மூடு
கேடிஎம் கொமுட்டர் சேவை பன்முக மின்சாரத் தொடருந்துகளை (Electric Multiple-Unit) (EMU) பயன்படுத்துகிறது. இதுவே மலேசிய தொடருந்து நிறுவனத்தால் இயக்கப்பட்ட முதலாவது மின்சாரத் தொடருந்து சேவையாகும். இதற்குப் பின்னர்தான் கேடிஎம் இண்டர்சிட்டி (KTM Intercity); கேடிஎம் இடிஎஸ் (KTM ETS); ஆகிய இரு சேவைகளும் பயன்பாட்டிற்கு வந்தன.[1]