![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/df/K1Af86T5-1.jpg/640px-K1Af86T5-1.jpg&w=640&q=50)
கோயம்புத்தூர் மாநகராட்சி
இது தென்னிந்தியாவின் தொழில்நகரம் மற்றும் தமிழகத்தின் இரண்டாவது மிகப்பெரிய மாநகராட்சி ஆகும் / From Wikipedia, the free encyclopedia
கோயம்புத்தூர் மாநகராட்சி ( Coimbatore Corporation) இந்தியாவின் மாநிலமான தமிழகத்தின் மேற்குப் பகுதியில் கோயம்புத்தூர் மாநகரத்தை ஆட்சி செய்யும் உள்ளாட்சித் துறையின் ஒரு அமைப்பாகும். தென்னிந்தியாவின் சென்னை, ஐதராபாத், பெங்களூருக்கு அடுத்த நான்காவது மிகப்பெரிய மாநகராட்சி கோயம்புத்தூர் ஆகும். இந்தியாவில் மும்பைக்கு அடுத்த அதிக தொழில் முதலீடுகளை கொண்டுள்ள ஓர் மாநகரம் ஆகும். கோயம்புத்தூர் மாநகராட்சி கிட்டத்தட்ட 148 வார்டுகளை கொண்டுள்ளது. இது சுமார் 306.4 ச.கிமீ பரப்பளவுக்கு விரிந்த மாநகரமாகும். தமிழக பரப்பளவில் இரண்டாவது மிகப்பெரிய நகரம் ஆகும். சென்னை மாநகராட்சியைப் போலவே பல நகராட்சிகளையும் பல பேரூராட்சிகளையும் உள்ளடக்கி உள்ளது. அதனடிப்படையில் கோயம்புத்தூர் பெருநகர மாநகராட்சி ஆண்டு வருவாய் கிட்டத்தட்ட 754 கோடி ரூபாய் ஆகும். இது தமிழக மாநகராட்சிட்சிகளில் வரி வசூலில் இரண்டாவது இடத்தை கொண்டுள்ளது.
கோயம்புத்தூர் மாநகராட்சி | |
---|---|
![]() | |
வகை | |
வகை | |
தலைமை | |
மாநகராட்சி மேயர் | திருமதி. கல்பனா ஆனந்தகுமார் திமுக04.03.2022 |
துணை மேயர் | வெற்றிச்செல்வன் திமுக 04.03.2022 |
மாநகராட்சி ஆணையாளர் | திரு. மு. பிரதாப் இ.ஆ.ப |
மாநகராட்சி துணை ஆணையாளர் | Dr.M.ஷர்மிளா |
மாவட்ட ஆட்சியர் | திரு. கிராந்திகுமார் பதி IAS |
கட்டமைப்பு | |
![]() | |
அரசியல் குழுக்கள் | ஆளும் கட்சி (96)
எதிர்கட்சிகள் (4) |
கூடும் இடம் | |
![]() | |
விக்டோரியா நகர மண்டபம் | |
வலைத்தளம் | |
ccmc |
கோவை மாநகரம் கோயம்புத்தூர் மாவட்டத்தின் தலைநகரமாகும். நெசவு சார்ந்த தொழில்கள், மின் மற்றும் மின் அணு சார்ந்த தொழில்கள், மற்றும் மின்சார நீரேற்றி தயாரித்தல் உள்ளிட்ட பல தொழில்களில் இந்தியாவில் முன்னணி வகிக்கும் மாநகரமாகும். விரைவில் பெருநகராக(cosmopolitan city) வளர்ச்சி அடையும் நிலையில் உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலை மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளதால் இதன் நலம் பயக்கின்ற காலநிலை மிகவும் வரவேற்கக் கூடியதாக ஆண்டு முழுவதும் அமைந்துள்ளது.